பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசத்தில் விலைவாசி உயர்வை கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கைது செய்யப்பட்டனர்..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் விலைவாசி உயர்வை கண்டித்து இன்று மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக பாபநாசம் ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள தலைமை தபால் நிலையம் முன்பு ஒன்றிய செயலாளர் முரளிதரன் தலைமையில், விலைவாசி உயர்வு மற்றும் அதிகரித்து வரும் வேலையின்மை காரணமான மோடி அரசை கண்டிப்பதாக கூறி, கைகளில் கொடிகளை ஏந்தி, மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் இட்டவாறு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்த பாபநாசம் போலீசார் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.