பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசம் அருகே தனியார் மெட்ரிக்குலேஷன் மேல்நில்லைப் பள்ளியில் ஒலிம்பிக் ஜோதி ஏற்றி கோலாகலமாக கொண்டாடிய விளையாட்டு விழா….
பல்வேறு விளையாட்டு சாகச நிகழ்ச்சிகளை நிகழ்த்திய மாணவ மாணவிகள்….
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே
ராஜகிரி தான் ஸ்ரீ உபயத்துல்லா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 30 ஆம் ஆண்டு விளையாட்டு விழா ஒலிம்பிக் ஜோதி ஏற்றி கோலாகலமாக நடைபெற்றது …
இவ்விழாவில்
ராஜகிரி காசிமியா ஜமாலியா சமூக மேம்பாட்டு இயக்கத்தின் நிறுவன தலைவர் முபாரக் ஹீசைன் ,
பள்ளி தாளாளர் நூர் முகமது, பள்ளி நிர்வாகக்குழு உறுப்பினர் முகமது பாரூக் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்புரையாற்றினர்.
விழாவில் சிறப்பு விருந்தினராக பூண்டி புஷ்பம் கல்லூரியின் முன்னாள் அறிவியல் புல தலைவர் டாக்டர். ராபர்ட் அலெக்ஸ்சாண்டர் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டி சிறப்புரையாற்றினார்.
விழாவில் மாணவ மாணவிகளின் பல்வேறு விளையாட்டு போட்டிகள், சாகச கலை நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது.
நிகழ்ச்சியில் பெற்றோர்கள் , ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.