தஞ்சாவூர் செய்தி.ஜோ. லியோ

சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழக 37வது பட்டமளிப்பு விழா

தஞ்சாவூரில் இயங்கிவரும் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 37வது ஆண்டு நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் வேந்தர் ஆர்.சேதுராமன் தலைமை வகிக்க,துணைவேந்தர்டாக்டர்எஸ்.வைத்தியசுப்பிரமணியம் அனைவரையும் வரவேற்றார். அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகத்தின் (AICTE) தலைவர் பேராசிரியர் டி.ஜி. சீதாராம் அவர்கள் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டம் வழங்கும் விழாவில் அவர் பேசும் போது. தொழில்நுட்பக் கல்வியின் தரத்தைமேம்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியதைத் தொடர்ந்து.

அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு 1987ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. திறன்மிக்கப் பொறியாளர்களையும், ஆசிரியர்களையும் உருவாக்குவதற்காகப் பொறியியல் கல்வியில் மாற்றங்களை ஏற்படுத்த கற்றல், கற்பித்தல் அகாதெமி உருவாக்கப்பட்டன.

அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு கட்டுப்பாட்டில் 3 ஆயிரத்து 600-க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகள் உள்ளன. அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய துறைகளில் உலக அளவில் மூன்றாமிடத்தில் உள்ளோம். உலகில் முதலிடத்தைப் பெறுவதற்கான வாய்ப்பும் பிரகாசமாக உள்ளது.

NEP 2020 என்பது இந்தியாவின் அம்ரித் காலின் போது மாணவர்களை மையமாக கொண்ட அனுபவமிக்க மற்றும் வாழ்நாள் முழுவதும் கற்றலை மையமாகக் கொண்ட கல்விக்கான நிகழ்ச்சி நிரலாகும் என்று குறிப்பிட்டார். அறிவு மற்றும் திறன் பொருளாதாரமாக இந்தியா வளர்ச்சியடைய முப்பரிமாண அணுகுமுறையாக ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் திறன் ஆகியவற்றில் மாணவர்கள் ஈடுபட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். “உலகின் திறன் மற்றும் அறிவு மையமாக இந்தியா இருப்பதற்கு ஆழமான தொழில்நுட்ப பொறியியல் மற்றும் முக்கிய பொறியியல் ஆகியவற்றின் சீரான வளர்ச்சி அவசியம் ” என்று கூறினார்.

4000க்கும் மேற்பட்ட UG, PG மற்றும் Ph.D பட்டங்களை பல்வேறு பொறியியல், அறிவியல், சட்டம், மேலாண்மை மற்றும் கல்வி பட்டப்படிப்புகளில் பட்டதாரிகளுக்கு வழங்கினார். அவர் மேலும் கூறுகையில் தாய்மொழி கல்வியின் அவசியத்தை வலியுறுத்தியதோடு AICTE நாடு முழுவதும் 12 Indovation -India Innovation மையங்களை நிறுவ திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.

பொறியியல் மற்றும் அறிவியலுக்கான நிறுவனர்-வேந்தரின் சிறந்த முனைவர் பட்டம் முறையே டாக்டர் சி.பாலசுந்தர் மற்றும் டாக்டர் சிவா பாலசுப்ரமணியம் ஆகியோருக்கும், 2023ஆம் ஆண்டின் சிறந்த பொறியியல் பட்டதாரிக்கான பட்டம் பி.டெக் விண்வெளி பொறியியல் துறையின் மாணவி எஸ்.தனிஷாவுக்கு வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *