நாமக்கல் பெரியூர் அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் ஸ்ரீ பகவதி அம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக விழா இன்று சிறப்பாக நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்

நாமக்கல்

நாமக்கல் மாவட்டம் நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் அருகே தும்ங்குரிச்சி கிராமம் 8 வார்டில் உள்ள பெரியூரில் எழுந்தருளி உள்ள அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர், ஸ்ரீ பகவதி அம்மன் ஆலயங்கள் பொணரமைப்பு செய்யப்பட்டு நூதன புனராவர்த்தன ஜீர்ணோதாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் இன்று ஞாயிறு காலை 7:00 மணி முதல் 8:30 மணிக்குள் நடைபெற்றது

கடந்த 3 ஆம் தேதி பாலக்கால் நடப்பட்டு, யாகசாலை அமைத்து , 9 ஆம் தேதி மங்கள கணபதி வழிபாடு உள்ளிட்டவைகள் நடத்தப்பட்டு

இன்று 10.09.2023 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணி அளவில் மங்கள இசை திருமுறைகள் பாராயணம் நாடி சந்தானம் உள்ளிட்ட பூஜைகள் நடத்தப்பட்டு உயிர் சக்திகளை ஸ்ரீ சக்தி விநாயகர் ஸ்ரீ பகவதி அம்மனுக்கு சேர்த்தல் இரண்டாம் கால யாக கேள்விகளை மங்கள நிறைவு வேள்வி யாத்ரா தானம் மஹா தீபாராதனை கலச புறப்பாடு

வேத கோஷங்கள் முழங்க மங்கள நாதஸ்வர இன்னிசை முழங்க கோபுரத்திற்கும் மூல ஸ்தானத்திற்கும் மஹா கும்பாபிஷேகம் மகா அபிஷேகம், தசதானம் அலங்காரம், மகா தீபாரதனை பிரசாதம் வழங்கப்பட்டது ,

இதற்கான ஏற்பாடுகளை விழா குழு சார்பாக விளையாடும் தர்மகர்த்தா ராமசாமி, குணசேகரன் உள்ளிட்டவர்கள் செய்திருந்தனர்

இதில் ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும் காலை முதல் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *