சென்னை கொளத்தூர் செய்தியாளர்
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாதவரம் அடுத்த மாத்தூரில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் சிறுவர் முதல் வாலிபர்கள் வரை சுமார் 500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்ட சிலம்பு போட்டியை பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி துவக்கி வைத்தார்.
முன்னதாக சிலம்பத்தில் கலந்து கொண்ட சிறுவர் சிறுமியர்கள் பிரதான சாலையில் இருந்து நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு ஊர்வலமாக மேளதாளத்துடன் வந்தனர்.
பள்ளி மாணவ மாணவியர்கள் பழமையான வீர விளையாட்டுகளை செய்து காண்பித்து பார்வையாளர்களை அசத்தினர்.பின்னர் சிறுவர்களின் வயதுக்கு ஏற்ப விளையாட்டு குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்களுக்கு சிலம்ப போட்டி நடைபெற்றது.
திமுக மாதவரம் வடக்கு பகுதி செயலாளர் புழல் நாராயணன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் திமுக கழக நிர்வாகிகள் பல கலந்து கொண்டு சிறப்பித்தனர் நிகழ்வின் இறுதியில் அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.