பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசம் அருகே தனிப்படை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 1 கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல்….
4 வாலிபர்கள் கைது ….
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருப்பாலைத்துறை பகுதியில் கடந்த சில நாட்களாக கஞ்சா புழக்கம் அதிகமாக இருந்து வந்துள்ளது .
இந்நிலையில்காவல் துணை கண்காணிப்பாளர் பூரணி அதிரடி உத்தரவின்படி பாபநாசம் ஆய்வாளர் கலைவாணி தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுப்பட்டுருந்தினர்.
அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் கஞ்சா வைத்திருப்பதாகவும் உடனே அந்த பகுதிக்கு வந்தால் அவர்களை பிடித்து விடலாம் எனவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் திருப்பாலைத்துறை குடமுருட்டி ஆற்றின் கரை ஓரத்தில் வெவ்வேறு இரண்டு வகையான இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த நான்கு வாலிபர்களான விருத்தாசலம் பகுதியை சேர்ந்த முகமது சல்மான் (வயது – 19) அய்யம்பேட்டை பகுதியை சேர்ந்த மகேந்திரன்
(வயது -25) ,கட்டை என்கிற கதிர்வேல் (வயது -22) ,ஜம்புகேஸ்வரர் (வயது – 22)ஆகியோரை சோதனை செய்ததில் அவர்களிடமிருந்துசுமார் 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1 கிலோ 200 கிராம் எடை கொண்ட அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
உடனடியாக அவர்களை கைது செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து பாபநாசம் நீதிபதி அப்துல்கனி முன்பு ஆஜர் படுத்தினர்.
கஞ்சா வைத்திருந்த நான்கு வாலிபர்களையும் 15 நாள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதன்பேரில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.