நாமக்கல்
சனாதானத்தை ஒழிப்போம் என்று பேசிய அமைச்சர் உதயநிதி அவருக்கு ஆதரவாக பேசிய அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் உரிய நடவடிக்கை எடுக்கோரி இன்று நாமக்கல்லில் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை பூட்டு போடும்100 க்கும் மேற்ப்பட்ட பா. ஜ. க வினர் கைது
நாமக்கல் மாவட்டம் நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமி கோயில் அருகே சனாதானத்தை ஒழழிப்போம் என்று பேசிய தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவாக பேசிய தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவை கண்டித்து
நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் அருகே உள்ள இந்து அறநிலைய த்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு பூட்டு போடும் போராட்டத்தை நடத்த பாஜக ஆன்மீக ஆலயம் மேம்பாட்டு பிரிவு சார்பில் முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய 100க்கும் மேற்பட்ட பாஜகவினர் கைது இதில் பா. ஜ. க மாநிலத் துணைத் தலைவர் கே. பி. ராமலிங்கம் ,மாவட்ட தலைவர்என. என். பி. சத்தியமூர்த்தி ,நகரத் தலைவர் கே. பி. சரவணன் உள்ளிட்டோர்
பங்கேற்றனர்
முன்னதாக கோட்டை சாலையில் இருந்து பேரணியாக வந்த பாஜகவினர் இந்து அறநிலையத்துறை அலுவலகத்திற்கு முன்பு ஆர்ப்பாட்டம் செய்து பின்னர் முற்றுகையிட்டனர் ஆர்ப்பாட்டத்தில் சமாதானத்திற்கு எதிராக பேசிய உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர் பாபுவை கைது செய்ய வேண்டும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்து ஆர்ப்பாட்ட கோசங்களை எழுப்பினர்
பின்னர் அனைவரையும் கைது செய்த நாமக்கல் போலிசார் திருமண மண்டபம் ஒன்றில் அடைத்தனர் இந்த முற்றுகை போராட்டத்தால் ஆஞ்சநேயர் கோயிலுக்கு சாமி கும்பிட வந்த பக்தர்கள் சிறிது நேரம் சிரமத்துக்கு உள்ளாகினர்
பாதுகாப்பு கருதி நாமக்கல் மாவட்ட காவல்கண்கானிப்பாளர் ச. ராஜேஸ்கண்ணன் உத்தரவின் பேரில் நாமக்கல் துணை காவல் கண்காணிப்பாளர் தன்ராஜ் நாமக்கல் ஆய்வாளர் சங்கர பாண்டியன் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் பூர்ணிமா ஆகியோர் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தனர்