பழனி அரசு மருத்துவமனையில் தற்கொலைகளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி..
திண்டுக்கல் மாவட்டம் பழனி அரசு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை உத்தரவின் பேரில் மாவட்ட மனநல திட்டம் மற்றும் பழனி அரசு மருத்துவமனை இணைந்து தற்கொலைகளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றன.
நடைபெற்ற பேரணியின் தலைமையாக பழனி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர். உதயகுமார்
சிறப்பு அழைப்பாளராக காவல் சார்பு ஆய்வாளர் கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பாரத் நர்சிங் கல்லூரி மாணவிகள் 70க்கும் மேற்பட்டோர் தற்கொலைக்கு எதிராகவும் தன்னம்பிக்கைக்கு ஆதரவாகவும் பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு அரசு மருத்துவமனையில் இருந்து பேரணி புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தன.
தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டும் தற்கொலைக்கு எதிராக வாழ வேண்டும் எந்த சூழ்நிலையிலும் தோல்வியை கண்டு துவள கூடாது. எந்நிலையிலும் தற்கொலை முடிவை எடுக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறும் பல்வேறு வாசகங்கள் பொருந்திய பதாகைகளை ஏந்தியவாறும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றன.
இந்த பேரணியை தலைமை மருத்துவர். உதயகுமார் கொடியே சேர்த்து தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து மருத்துவர்களான ஸ்ரீதர், காந்தி,சசிகலா உள்ளிட்ட மருத்துவர்கள் பணியாளர்கள் செவிலியர்கள் கலந்து கொண்டு பேரணி நடைபெற்றன…