வலங்கைமான் அருகே உள்ள வடக்கு பட்டம் கிராமத்தில் உள்ள அனுபம குஜ நாயகி சமேத ஸ்ரீ பசுபதி ஈஸ்வரர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள பட்டாபிகேசபுரம்எனவும் பட்டம் எனவும் இரண்டு பேர்களை கொண்ட வடக்கு பட்டம் கிராமத்தில் உள்ள அனுபவ குஜ நாயகி சமேத ஸ்ரீ பசுபதி ஈஸ்வரர் ஆலயத்தில் கும்பாபிஷேகத்துக்கு முன்னிட்டு கடந்த ஆறாம் தேதி புதன்கிழமை யாகசாலை பூஜைகள் தொடங்கி, ஒன்பதாம் தேதி சனிக்கிழமை இரவு வரை மூன்று கால பூஜைகள் நடைபெற்றன.
ஞாயிற்றுக்கிழமை காலை ஏழு மணிக்கு யாகசாலை பூஜைகள் தொடங்கி நான்காம் காலம் பூஜை முடிந்து தீபாரணைநடைபெற்று, கடம் புறப்பாடு நடைபெற்றது, காலை பத்து மணிக்கு விமான கும்பாபிஷேகம் ,பத்தே கால் மணிக்கு மூலவர் கும்பாபிஷேகம் நடைபெற்றது,
பின்னர்தீபாராதனை நடைபெற்று அருட்பிரசாதம், அன்னதானம் வழங்குதல் நடைபெற்றது ,மாலை சுவாமி வீதி உலா நடைபெற்றது. யாகசாலை பூஜைகளை மருங்கூர் எம் . சாட்சிநாத குருக்கள், ஆலய அர்ச்சகர்கள் பட்டம் எஸ் சரவணன் குருக்கள், எஸ் வெங்கடேசன் குருக்கள் ஆகியோர் செய்திருந்தனர், திருக்கோயிலை உபயமாக திருப்பணி செய்தவர்கள் அரண் பணி அறக்கட்டளை கோவை ,மங்கல இசை தவில் இசைகலைமணிஆவூர் ஏ ஆர் ரவிச்சந்திரன் குழுவினர்,சிறப்பு ஆன்மீக சொற்பொழிவு தவத்திரு திருவடிக்குடி சுவாமிகள் ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்டம், திருக்கயிலை வாத்தியம் திருக்குடந்தை கயிலை சிவ பூதகன திருக்கூட்டம், விழா ஏற்பாடுகளை பட்டம் கிராம வாசிகள் சிறப்பாக செய்திருந்தனர்.