மதுரை, நாகமலை புதுக்கோட்டையில் வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் அமைந்திருக்கும் கல்வியியல் கல்லூரியின் 17ம் ஆண்டு துவக்க விழா
நடைபெற்றது.
இவ்விழாவில் கல்வியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர்
தா.தேன்மொழி அனைவரையும் வரவேற்று, கல்வியியல் கல்லூரி கடந்து வந்த பாதையினை பற்றி கூறினார். நாடார் மகாஜன சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி.கரிக்கோல்ராஜ் தலைமையுரை ஆற்றினார். கல்லூரியின் செயலாளர் சுந்தர் விழாவினை தொடக்கி வைத்தார்.
கல்லூரியின் பொருளாளர் நல்லதம்பி விழாவில் சிறப்புரை ஆற்றினார்.
சிறப்பு விருந்தினரான ஏ.வி.எஸ்.மாரிமுத்து விழாவில் பேசும் போது “மாணவர்கள் தொழிற்கல்வி பெற்று வாழ்வில் முன்னேற வேண்டும் என்றும் தொழிற்கல்வியின் அவசியம் குறித்தும் பேசினார்.
மேலும் மாணவர்கள் போட்டித் தேர்வுகள் மூலம் அரசுத்துறைகளில் நுழைந்து மற்ற கல்லூரி மாணவர்களுக்கு முன்னுதாரணமாய் திகழ வேண்டும் என்றும் கூறினார். இதில் நாடார் மகாஜன சங்கம் வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியின் முதல்வர் முனைவர் இராஜேந்திரன், துணைமுதல்வர் முனைவர் செல்வமலர், மற்றும் சுயநிதிப்பிரிவு இயக்குநர் முனைவர் ஸ்ரீதர் வாழ்த்துரை வழங்கினார்.
இறுதியாக சிறப்பு விருந்தினர் கல்வியியல் கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத அலுவலர்களை கௌரவப்படுத்தினார். இறுதியில் கல்வியியல் கல்லூரியின் உயிரியல் துறை உதவிப் பேராசிரியர் மாரிச்செல்வம் அனைவருக்கும் நன்றி கூறினார்.
இவ்விழாவில் கல்லூரியின் அனைத்துத்துறை பேராசிரியர்கள், மற்றும் கல்லூரியின் மாணவ மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.