பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்

பாபநாசம் அருகே
திருமண்டங்குடியில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்து ஏற்பட்டு வயிற்றில் மது பாட்டில் குத்தியதில் ஒருவர் பலி மூன்று பேர் படுகாயம்….

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அண்டக்குடி வீராஞ்சேரி மெயின் ரோட்டில் வசிப்பவர் தங்கராஜ் மகன் இளவரசன் வயது 32, விவசாயக் கூலி தொழிலாளி. இவரும் இவரது நண்பர்கள் அதே ஊரைச் சேர்ந்த செல்வகுமார் வயது 39, முருகானந்தம் வயது 48, மற்றும் அதே ஊரைச் சேர்ந்த ஹரிதாஸ் ஆகிய நான்கு பேரும் சேர்ந்து ஒரே மோட்டார் சைக்கிளில் மது குடிக்க திருமண்டங்குடியில் உள்ள மது கடைக்கு சென்று மது குடித்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு செல்லும் பொழுது வீட்டில் சென்று மது அருந்த பீர் பாட்டில்களை வாங்கி தனது இடுப்பில் சொருகிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்ற பொழுது கூனஞ்சேரி கடைத்தெரு பகுதியில் அதிவேகமாக சென்று நிலை தடுமாறி கீழே விழுந்ததில் இடுப்பில் வைத்திருந்த மது பாட்டில்கள் வயிற்றில் குத்தி படுகாயம் அடைந்த நான்கு பேர்களும் சிகிச்சைக்காக உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கிருந்து மேல் சிகிச்சைக்கு தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நான்கு பேரில் வீராஞ்சேரி தங்கராஜ் மகன் இளவரசன் வயது 32 என்பவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் படுகாயம் அடைந்த மூன்று பேர்களும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து இறந்த இளவரசன் மனைவி மகேஸ்வரி வயது 28 என்பவர் கொடுத்த புகாரின் பேரில் கபிஸ்தலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் இறந்த இளவரசனுக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில் அவரது மனைவி நிறைமாத கர்ப்பிணி என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *