வலங்கைமான் தாலுகாவில் பாரம்பரிய
முறையில் சுமார் 8 750 ஏக்கரில் சம்பா சாகுபடி பணிகள் மேற்கொள்ள விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுக்காவில் நடப்பு சம்பா பருவத்தில் சுமார் பத்தாயிரம் எக்டேரியில் ரொம்ப சாகுபடி பணிகள் மேற்கொள்ளபடஉள்ளது. சம்பா சாகுபடிகள் புழுதி மற்றும் சேற்று உழவு செய்து நேரடி விதைப்பு சுமார் 4000எக்டேரியிலும், சுமார் 2500 எக்டேரில் இயந்திர நடவு மூலமும், கை நடவு மூலம் சுமார் 3 500 எக்டேரில் சம்பா சாகுபடி பணிகள் மேற்கொள்ள விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் கை நடவு பாரம்பரிய முறையில் மேற்கொள்வதற்கு நாற்றங்கால் தயார் செய்யும் வழிமுறைகள் குறித்து வலங்கைமான் வேளாண்மை துறையினர் கூறியிருப்பதாவது:
ஒரு ஹெக்டேர் நெல் நடவிற்கு தண்ணீர் வசதியுடன் கூடிய 20 சென்ட் பரப்பு நாற்றங்கால் தேவை, ஒரு எக்டர் நடவு செய்திட நீண்ட கால ரகம் எனில் 30 கிலோ, மத்திய காலமாயின் 40 கிலோ, குறுகிய கால ரகம் என்றால் 60 கிலோ தேவைப்படுகிறது.
விதை நேர்த்தி செய்து விதைப்பதால் இளம் வயதில் பாதிக்கக்கூடிய தோகை எரிப்பு நோயிலிருந்து 40 நாட்கள் வரை பாதுகாப்பு கிடைக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இவ்வாறு ஊற வைத்தவிதையை உடன் விதைக்க வேண்டுமெனில் நனைந்த கோனி சாக்கில் கட்டி மூடி 24 மணிநேரம் இருட்டில் வைத்து முளை எட்டி, பின்னர் விதைக்கலாம்.
அல்லது நிழலில் உலர்த்தி தக்க ஈரப்பதத்தில் சேமித்து பின்னர் விதைக்கலாம். நாற்றங்கால் தயாரிக்கப்பட்ட நிலம் 2.5மீட்டர் (எட்டடி) அகலம் உள்ள வாத்திகளாக 30 சென்டிமீட்டர் (ஒரு அடி) இடைவெளி உள்ள வாய்க்கால் பாத்தியை வ சுற்றிலும் அமைக்க வேண்டும் பரத்தியின் நீளம் 8 முதல் 10 மீட்டர் வரை நிலத்தின் சமன் அமைப்பு.மண்ணின் தன்னையே பொறுத்து அமைக்கலாம். வாய்க்கால் அணைக்கும் போது எடுக்கப்பட்ட மண்ணை பரர்த்தியில் பரப்பி நிரவலாம்.
பரத்தி சம்பந்தபடுத்துவது மிகவும் அவசியம். விதைப்பு முளைகட்டிய விதையினை பரத்யில் பரவலாக தூவ வேண்டும். தண்ணீர் அளவு1-2 சென்டி மீட்டர் அளவு இருந்தால் நல்லது நீர் நிர்வாகம் விதைத்த18-24 மணி நேரத்திற்குள் தண்ணீர் வடிக்கப்பட்டு விதை முளைக்க சந்தர்ப்பம் தரப்பட வேண்டும். தண்ணீர் குண்டுகளில் கூட தேங்கி நிக்காதவாறு பரத்தி அமைப்பும், நீர் நிர்வாகமும் அமைக்கப்பட வேண்டும். விதைத்த மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை நீர் கட்டுவது ,தண்ணீர் ஏங்கி நிற்காதவாறு அமைதல் வேண்டும். நீரின் உயரம் அஞ்சு நாளிலிருந்து சிறிது சிறிதாக நாற்டின் வளர்ச்சியை பொறுத்து உயர்த்தப்படலாம்.
அதிகபட்சமாக (ஒரு அங்குல ஆழம்) நீர் கட்டுவது சாலச் சிறந்தது. களை நிர்வாகம், விதைத்த மூன்றாம் அல்லது நான்காம் நாளில் களை முளைப்பிற்கு முந்திய களைக்கொல்லி நாற்றுகளுக்கு தெளிக்கப்பட வேண்டும். களைக்கொல்லி தெளிப்பதற்கு முன் பெரிய அளவு தண்ணீர் நிறுத்தப்பட வேண்டும். தேக்கப்பட்ட நீர் வடிக்கப்படலாகாது. மாறாக தானாகவே மண்ணில் மறைதல் நல்லது .20 சென்டிக்கு ஒரு டன் தொழு உரம், மாட்டு எரு தேவை, கடைசி உழவின் போது 20 சென்ட் நாற்றங்காலுக்கு 40 கிலோ டிஏபி உரமோ அல்லது 16 கிலோ யூரியாவும், 120 கிலோ சூப்பர் பாஸ்போர்ட் கலந்து இடப்பட வேண்டும்.
அடி உரமாக டி ஏ பி விடுவது குறைவான மண் சத்துள்ள நாற்றங்கால்களுக்கு மட்டுமே. மண் சத்துக்கள் குறைவாக உள்ள நாற்றங்காலுக்கு, நாற்றுகள் 25 நாட்களுக்கு பின்னர் எடுத்து நடவு செய்ய வேண்டிய தருணங்களில், 25 நாட்களுக்கு பின் ரசாயன உரங்களை இட்டு, அதிகபட்சம் அன்றிலிருந்து 10 நாட்களுக்குள் நாற்றுக்கள் எடுத்து நடவு செய்யப்படுதல் அவசியம்.
மிக அதிகமான களிமண் பகுதிகளில் நாற்றுக்கள் எடுக்கும் தருணத்தில் வேர்கள் அழுகின்ற நிலை ஏற்படின், விதைத்த பத்தாம் நாள் ஒரு செண்டிக்கு நான்கு கிலோ ஜிப்சம் மற்றும் ஒரு கிலோ டி ஏ பி கலந்து விட வேண்டும் என வலங்கைமான் வேளாண்மை துறையினர் தெரிவித்துள்ளனர்.