வெ.பார்த்தசாரதி செய்தியாளர் விழுப்புரம்.
விக்கிரவாண்டி சூர்யா பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா நடந்தது.
விக்கிரவாண்டி சூர்யா கல்லூரி அரங்கில் நடந்த விழாவிற்கு நிர்வாகி விசாலாட்சி பொன்முடி தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து பேசியதாவது.
கிராமப்புற மாணவர்களின் முன்னேற்றத்திற்காக ஆரம்பிக்கப் பட்டது,சென்னைக்கு நிகரான உட்கட்டமைப்பு வசதிகள் உள்ள கல்லூரி ஆகும்.

மாணவ ,மாணவிகள் தங்களின் பாட சந்தேகங்களை துறை ஆசிரியர்களிடம் கேட்டு புரிந்து படியுங்கள். அதேபோன்று பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் படிப்பில் அவர்களை தொடர் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும். சிறப்பாக படித்து வாழ்க்கையில் முன்னேற வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
துணை முதல்வர் ஜெகன் முன்னிலை வகித்தார். துறைத் தலைவர்ரங்கநாதன் வரவேற்றார்.கல்லூரி முதல்வர்கள் டாக்டர் அன்பழகன், வெங்கடேஷ், பாலாஜி, மதன் கண்ணன், சிகா பள்ளி முதல்வர் கோபால், துறை தலைவர்கள் டாக்டர் கிருபாகரன், சங்கர், பிரகாஷ்,சுபா, செந்தில்குமார்,ரமேஷ் , முத்துராமன்,துணை பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். முடிவில் பேராசிரியை இந்துமதிநன்றி கூறினார்.
.