திருவள்ளூர்

அத்திப்பேடு ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம கிராம ஒருங்கிணைந்த வேளான் வளர்ச்சி திட்டதின் கீழ் மரக்கன்று சோழவரம் வேளாண் துறை உதவி இயக்குனர் ரமேஷ், அத்திப்பேடு ஊராட்சி மன்ற தலை வர் ரமேஷ் ஆகியோர் வழங்கினர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது அத்திப்பேடு ஊராட்சி இந்த ஊராட்சியில் சோழவரம் வேளாண்துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் குடும்பத்திற்கு தலா இரு மரக்கன்று வீதம் 150 நபர்களுக்கு வழங்கினர்.

மேலும் 150 நபர்களுக்கு விரைவில் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தனர்.அதன்படி தற்போது அத்திப்பேடு ஊராட்சி சேர்ந்த 150 நபர்களுக்கு சோழவரம் வேளாண் துறை உதவி இயக்குனர் ரமேஷ் மற்றும் அத்திப்பேடு ஊராட்சி மன்ற தலைவர் அத்திப்பேடு ஆர் ரமேஷ் ஆகியோர் பயனாளிகளு க்கு வழங்கினர் அப்போது உதவி வேளாண் அலுவலர் ப.ஜாய்ஸ், வேளாண்துறை உதவி தொழில் நுட்ப மேலாளர் செல்வகுமார், ஆகியோர் உடன் இருந்தனர்.

இதற்கான நிகழ்ச்சி அத்திப்பேடு ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் அருகே நடைபெற்றது.இதில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மோகன், ஊராட்சி செயலர் குமார், மற்றும் வார்டு உறுப்பினர் உள்ளி ட்ட பலர் கலந்து கொண்டனர்.

இது குறித்து வேளாண்துறை உதவி இயக்குனர் ரமேஷ் கூறியதாவது.

தற்போது கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாள ன் வளர்ச்சி திட்டத்தின் கீழ் சோழ வரம் ஒன்றியத்திலுள்ள ஆத்தூர், பழைய எருமை வெட்டி பாளையம், ஆங்காடு, பஞ்செட்டி, சின்னம்பேடு, ஆகிய ஊராட்சிகளில் குடும்பத்தி னருக்கு தலா இரு தென்னங்க ன்று இலவசமாக வழங்கப்பட்டு ள்ளதாகவும் மேலும் பல்வேறு ஊராட்சிகளுக்கு விரைவில் வழங்க உள்ளதாகவும் கூறினார்.

பின்னர் தேசிய வேளாண் வளர் ச்சி திட்டத்தின் கீழ் சிங் சல்பேட், வேளாண் கருவி தொகுப்புகள், ஜிப்சம் உரம், மின்கல தெளிப் பான், தார்ப்பாய், உயிர் உரம், உள்ளிட்டவைகள் 50 சதவீத மானியத்துடன் வழங்குவதாகவும், மற்றும் பசுமை போர்வை திட்டத் தின் கீழ் மாங்கனி, தேக்கு, சிவப்பு தண்டலம், உள்ளிட்ட மரக்கன்று இலவசமாக வழங்க உள்ளதாக கூறினார்.

இவ்வாறு சோழவரம் வேளாண் துறை உதவி இயக்குனர் ரமேஷ் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *