கிருஷ்ணகிரி செய்தியாளர் வீ. முகேஷ்
குன்டும் குழியுமான நெடுஞ்சாலை மழை நீர் தேங்கி நின்று வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அவதி
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா சந்தூர் பகுதியில் அவல நிலை இந்த சாலை வழியாக போச்சம்பள்ளி சிப்காட் தொழில் வளாகத்திற்கு வேலை செய்யும் ஊழியர்கள் இருசக்கர வாகனங்கள் கம்பெனி பேருந்துகள் போச்சம்பள்ளி வார சந்தைக்கு பள்ளி மாணவ மாணவிகள் அரசு பேருந்துகள் அதிக என்னிக்கையில் இயக்கப்படுகிறது
அது மட்டுமல்லாமல் அரசு அலுவலகத்திற்கும் அதிகாரிகள் இதன் வழியாக தான் சென்று வருகின்றன நெடுஞ்சாலை குன்டும் குழியுமாக காணப்படுகிறது
பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதில்லை தரம் இல்லாமலும் சாலைகள் அமைப்பதால் குறைவான நாட்களில் தார் சாலை சேதம் அடைகிறது சாலையை விரிவாக்கம் செய்ய அரசுக்கு கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஒரு வழி சாலையை இருவழி சாலையாக மாற்றம் செய்யவும் பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை மழைக்காலங்களில் சாலையில் மழை நீர் தேங்கி நிற்கிறது மழைநீர் நெடுஞ்சாலையில் குளம் போல் தேங்கி நிற்பதால் நெடுஞ்சாலை வழியாக வாகனங்களிலில் செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்படுகின்றன.
பொதுமக்கள் அதன் வழியாக நடந்து செல்பவர்கள் பொதுமக்கள் மாணவ மாணவிகள் முகம் சுளித்துக்கொண்டு நடந்து செல்கின்றன குண்டும் குழியுமான இந்த நெடுஞ்சாலையை சீரமைத்து தர பகுதி மக்கள் சமூக ஆர்வலர்கள் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை.