ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்
மகளிர் திட்டம் மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இணைந்து நடத்திய. அடல் ஓய்வூதிய திட்டம் குறித்த விழிப்புணர்வு
திருவாரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட தண்டலை ஊராட்சி விளமல் பகுதியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் மகளிர் திட்டம் மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இணைந்து நடத்திய அடல் ஓய்வூதிய திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ. தலைமையில் நடைபெற்றது.
பின்னர் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது
முன்னொரு காலத்தில் திருமண சமயத்தில் உள்ள பெண் வீட்டாரோ அல்லது மாப்பிள்ளை வீட்டாரோ பெரும்பாலும் அரசு துறையில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்கான காரணம் 60 வயதிற்கு மேலான வரும் ஓய்வூதியத்தினை அடிப்படையாக கொண்ட அறுவது வயதிற்கு மேல் வேலை பார்த்து வருமானம் ஈட்டுவது என்பது அனைவராலும் முடியாத ஒன்றாகும். 60 வயதிற்கு மேல் நமக்கு தேவைப்படும் தொகையினை பெறுவதற்காக அடல் ஓய்வூதியத்திட்டதினை அரசு வழங்கியுள்ளது.
திட்டத்தில் சந்தாதாரர் தேர்ந்தெடுக்கும் திட்டம் மற்றும் காலத்தில் அவர் முறையாகக் கட்டும் தொகையைப் பொறுத்து ஓய்வூதியம் தொகை ஆயிரம் இரண்டு ஆயிரம் மூன்று ஆயிரம் நான்கு ஆயிரம் ஐந்து ஆயிரம் கிடைக்கும். வருமான வரி கட்டாத, 18 முதல் 40 வயது வரையுள்ள இந்தியக்குடிமகன் எவரேனும் இத்திட்டத்தில் சேரலாம். வங்கிக்கிளை தபால் அலுவலகம் அல்லது மின்னணு முறையில் சந்தாதாரர் திட்டத்தில் சேரலாம். திட்டத்திற்கான சந்தாதாரர் விண்ணப் படிவத்தில் பென்சன் தொகை, சந்தா செலுத்தும் காலம் ஆகியவற்றைப் பூர்த்தி செய்து அளிக்க வேண்டும் சந்தாத் தொகையினை மாதம் காலாண்டு அரையாண்டு காலத்தில் சேமிப்புக் கணக்கிலிருந்து ஆட்டோ டெபிட் முறையில் செலுத்த வேண்டும். இதுபோன்ற திட்டங்களிலகுறுகிய கால வயதினிலே சேர்ந்து ஒவ்வொருவரும் பயன்பெறவேண்டும் என மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தெரிவித்தார்
நிகழ்வில், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) வடிவேல் இந்தியன் வங்கி தலைமை மண்டல மேலாளர் நாகேஷ்வரராவ், மண்டல பொது மேலாளர் பிரியங்கா குப்தா, முன்னோடி வங்கி மேலாளர் செந்தில் உதவி மேலாளர் ஈஸ்வர தூட் நிர்மல் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மகளிர் குழு உறுப்பினர்கள் வங்கியாளர்கள் கலந்து