ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்
திருவாரூர் மாவட்ட அண்ணா திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
திருவாரூர் மாவட்ட அண்ணா திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மன்னார்குடி மாவட்ட கட்சி அலுவலகத்தில் கழக அமைப்பு செயலாளரும் மாவட்ட கழக செயலாளருமான முன்னாள் அமைச்சர் ஆர் காமராஜ் எம் எல் ஏ தலைமையில் நடைபெற்றது

கழக அமைப்பு செயலாளரும் மன்னார்குடி முன்னாள் நகர மன்ற தலைவருமான சிவா ராஜமாணிக்கம் முன்னிலை வகித்தார் வரவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் பூத் கமிட்டி அமைப்பது தேர்தலில் பணியாற்றுவது ஒருவேளை நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் சேர்த்து வைக்கப்பட்டால் அதிலும் திறம்பட பணியாற்றுவது குறித்து இதில் விவாதிக்கப்பட்டது .
பொதுக்குழுவிற்கு பிறகு புதிய உறுப்பினர்களை அதிக அளவில் சேர்ப்பதற்கான படிவங்களும் கூட்டத்தில் வழங்கப்பட்டது வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை வெகு சிறப்பாக கொண்டாடவும் கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் ஆர் காமராஜ் வேறு எந்த கிராமத்தில் , நகர ஒன்றிய பேரூர் கழக தொண்டர்கள் நிர்வாகிகள் ஒரு நபர் கூட மாற்று கட்சியில் இணைந்திருக்க மாட்டார்கள் .
புரட்சித் தலைவர் வழியில் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வழியில் ஒன்றரை கோடி தொண்டர்களாக இருந்த இயக்கத்தை 2 கோடி தொண்டர்களாக உருவாக்கியவர் முன்னாள் முதலமைச்சர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடி யார் ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிற அடிப்படையில் நாடாளுமன்ற தேர்தலுக்கும் தயாராக இருக்க வேண்டும் அதோடு சட்டமன்ற தேர்தலுக்கும் தயாராக இருக்க வேண்டும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சி எடப்பாடி யார் தலைமையில் மலரும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது வேறு யாரும் இந்த கழகத்திற்கு எதிரிகள் கிடையாது உள் கட்சியிலே பல துரோகிகள் வந்து துரோகத்தை விளைவித்தார்கள் அதெல்லாம் இப்பொழுது எடுபடாமல் போகிவிட்டது .
அதிமுக இரண்டாக உடைந்து விட்டது மூன்றாக பிரிந்து விட்டது என கூறினார்கள் . அண்ணா திமுக இரண்டாகவும் மூன்றாகவும் இல்லை அதிமுக ஒன்றாகதான் இருக்கிறது முன்னாள் முதலமைச்சர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடி யார் அவர்களின் தலைமையில்தான் இருக்கிறது 15 லட்சம் பேர் கூடிய மாநாட்டை இதுவரை தமிழ்நாட்டில் எந்த கட்சியும் யாரும் நடத்தவில்லை என்று பேசினார்
ஆலோசனைக் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாப்பா சுப்பிரமணியன் மாவட்ட இணைச் செயலாளர் சாந்தி மாவட்ட கழக பொருளாளர் ஏ என் ஆர் பன்னீர்செல்வம் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பொன் வாசுகிராம் , ஒன்றிய குழு தலைவர்கள் வலங்கைமான் சங்கர் குடவாசல் கிளாரா செந்தில் முத்துப்பேட்டை கனி அமுதா ரவி மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் வர்த்தக அணி ரயில் டீ பாஸ்கர் மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை இணைச் செயலாளர் புவனேஸ்வரி நகரக் கழக செயலாளர்கள் திருவாரூர் ஆர்டி மூர்த்தி மன்னார்குடி ஆர் ஜி குமார் திருத்துறைப்பூண்டி சண்முக சுந்தர் கூத்தாநல்லூர் ராஜசேகர் ஒன்றிய கழக செயலாளர்கள் திருவாரூர் மணிகண்டன் செந்தில்வேல் நன்னிலம் சி பி ஜி அன்பு ராம குணசேகரன் குடவாசல் ராஜேந்திரன் வலங்கைமான் இளவரசன் நீடாமங்கலம் ராஜேந்திரன் ஜனகர் மன்னார்குடி தமிழ் கண்ணன் கோட்டூர் ஜீவானந்தம் ராஜா சேட்டு திருத்துறைப்பூண்டி சிங்காரவேலு பாலகிருஷ்ணன் முத்துப்பேட்டை நடராஜன் கொரடாச்சேரி சேகர் பாஸ்கர் பேரூர் கழக செயலாளர்கள் உட்பட மாவட்ட நகர ஒன்றிய கழக நிர்வாகிகள் மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் பொறுப்பாளர்கள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் நகர மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்