வலங்கைமான் அருகே உள்ள கோவிந்தகுடி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 48 மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை திமுக மேற்கு ஒன்றிய செயலாளர்வீ.அன்பரசன் வழங்கினார்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானை அடுத்த கோவிந்தகுடி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது, நிகழ்ச்சிக்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் முகமது பக்கர் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக பள்ளியின் தலைமையாசிரியர் சிவசங்கரன் அனைவரையும் வரவேற்று பேசினார்,
ஊராட்சி மன்ற தலைவர் ஜி. பி .மணிகண்டன், துணைத் தலைவர் ரஹமத் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வலங்கைமான் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பரசன் 48 மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக நிர்வாகிகள், மற்றும்ஆசிரியர்கள், ஆசிரியைகள், மாணவ மாணவிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.