பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசம் சட்டமன்ற உறுப்பினரிடம் இலவச வீட்டு மனை பட்டா வேண்டி சி.பி.எம்.எல். மக்கள் விடுதலை கட்சியினர் மனு ……

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவலஞ்சுழி கிராமத்தில் 15 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்வதற்கு வாழ்விடம் இன்றி வாடகை வீட்டில் சுமார் 130 குடும்பங்கள் வசித்து வருகின்றன .
இந்நிலையில் கும்பகோணம் கோட்டாட்சியரிடமும் , வட்டாட்சிரிடமும் , தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை இலவச வீட்டு மனை பட்டா வேண்டி மனு அளித்துள்ளதாகவும் ,
மேலும் திருவலஞ்சுழி கிராம சபை கூட்டங்களில் கடந்த 4 வருடங்களாக மனு அளித்துள்ளதாகவும் மேலும் இது சம்பந்தமாக பலமுறை போராட்டங்கள் செய்யும் பொழுது அதிகாரிகள் எல்லோரும் ஒன்று சேர்ந்து அமைதிப் பேச்சுவார்த்தை என்ற பெயரில் எங்கள் போராட்டங்களை தடுத்து நிறுத்தி உள்ளதாகவும், எனவே எங்கள் கோரிக்கை மனு மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்து தர தமிழக அரசு மாவட்ட நிர்வாகங்கள் எங்களை நீண்ட நாள் கோரிக்கையை
இதனால்வரை கவனத்தில் கொள்ளவில்லை எனவும்
தெரிவித்துள்ளனர் .
எனவே எங்களின் நீண்ட நாள் கோரிக்கையை கவனத்தில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லாவிடம்
சி .பி. எம் .எல் .மக்கள் விடுதலைக் கட்சியை சார்ந்த தஞ்சை மாவட்ட செயலாளர் அருணாச்சலம், கும்பகோணம் ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், கும்பகோணம் மாநகர செயலாளர் சங்கர், வாடகை வீடு குடியிருப்போர் நல சங்க செயலாளர் கோபி, திருவலஞ்சுழி ஊராட்சி செயலாளர் சங்கர், மற்றும்திரோவலஞ்சுழி கிராமத்தை சேர்ந்த பெண்கள் உள்பட 30க்கும் மேற்பட்டோர் கோரிக்கை மனுவை அளித்தனர் .
இந்த கோரிக்கை மனுவின் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் எம்.எச்.ஜவாஹிருல்லா தெரிவித்தார்.