மனிதர்களுக்கும் பிராணிகளுக்கும் நம்மை தரும் அகத்திக்கீரை வளர்ப்பு முறை.

மிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட அகத்தியை கால்நடைகளுக்கு உணவாக கொடுக்கலாம் என கால்நடை துறையினர் ஆலோசனை வழங்கி உள்ளனர்.அகத்தி இலைக்கு உள்ள மிக முக்கியமான ஒரு பண்பு உடலில் இருக்கும் நச்சுத்தன்மையை நீக்கும் வல்லமை கொண்டது.

இதனால் வாரம் ஒரு முறை மட்டும் கால்நடைகளுக்கு தீவனத்தில் அகத்திக் கீரையை கலந்து கொடுக்க வேண்டும். நாமும் வாரம் ஒரு முறையோ அல்லது மாதம் இருமுறையோ எடுத்துக் கொள்வது நமது உடல் நிலத்தை பாதுகாக்க உதவும்.

அகத்திக்கீரை வகைகளில் வேறு ஓரங்களில் பயிரிடலாம். கீரை வகைகள் நம் உடலில் ஏற்படும் சரும பிரச்சனைகளுக்கும் உடலில் இருக்கும் சத்து குறைபாடுகளுக்கும் ஒரு பிறந்த உணவாகும். அகத்திக் கீரையில் கால்சியம்,பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்றவை மிக அதிகமாக உள்ளது.

அகத்திக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நம் உடலில் ஏற்படும் தேவையற்ற அரிப்புகள் நீங்கவும், வயிற்றில் உண்டாகும் குழுக்களை அழிக்கவும்,தாய்ப்பாலை அதிகரிக்கவும் செய்கிறது. மேலும் வாய்ப்புண்ணை நீக்கும் குணம் கொண்டது அகத்திக்கீரை.

இதனை வாரம் ஒரு முறை உண்டு வந்தால் ,சிறுநீர் தடை இல்லாமல் போகும் மலம் மீளக்கியாவும்ஆகவும் பயன்படுகிறது. கண்கள் குளிர்ச்சி அடையும். உடல் சூடு குறையும்.பித்தம் குறைந்து, பித்த மயக்கம் ஆகியவை கட்டுப்படும்.

இதிலிருந்து அகத்திக்கீரை தைலம் தயாரிக்கப்படுகிறது. மிக முக்கியமாக பத்தியம் இருப்போர் அகத்திக் கீரையை சாப்பிடுவது ஆகாது. அகத்திக்கீரை பயிரிடும் முறை: அகத்திக் கீரையை ஒரு அடி முதல் இரண்டு அடி இடைவெளியில் வரிசையாக விதைத்து வளக்கலாம். எனவே, உயரம் மூணு முதல் நான்கடி இருக்கும் பாரு பார்த்துக் கொள்ள வேண்டும் ஒரு சிறிய புதூர் போல வளர்க்க வேண்டும் .

அகத்திக்கீரை மரமாக வளரும் வகையை சேர்ந்தது அப்படி வளக்கும்போது அதனை பராமரிப்பது மிகச் சிரமமாக இருக்கும். எனவே மூணு முதல் நாலடி இருக்குமாறு முதல் போல் வளர்த்து வருவதன் மூலம் பராமரிப்பது மிக எளிதாக இருக்கும். இதனால் அதன் நுனியை உடைத்து பராமரிக்க வேண்டும்.

இதில் இருந்து கிடைக்கும் இலை மற்றும் அகத்திப்பூ மிகச்சிறந்த உணவாகும். இதில் அதிக சத்துக்கள் உள்ளன. மேலும் இது அனைத்து விதமான மண்ணிலும் வளரும் தன்னை கொண்டது. இவற்றை நாம் மாடி தோட்டத்தில் தொட்டியில் வளர்க்கலாம். அகத்திக் கீரையை விதைகள் மூலம் வளர்க்க முடியும்.

அகத்திச் செடியில் வெள்ளை மற்றும் சிவப்பு அகத்தி என இரண்டு வகைகள் உள்ளன. அகத்திக்கீரை கால்நடை தீவனமாக, கால்நடைகளுக்கு மிகச்சிறந்த உணவாக உள்ளது. ஆடு, மாடு , கோழி, முயல், வாத்து, பன்றி போன்ற வளர்ப்பு பிராணிகளுக்கு கொடுக்கலாம்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *