திமுக தேர்தல் வாக்குறுதி 181

பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட வேண்டும் :

சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வேண்டுகோள் :

அரசு பள்ளிகளில் 2012-ம் ஆண்டு நியமித்த பகுதிநேர ஆசிரியர்கள் 12 ஆண்டாக பணிநிரந்தரம் செய்ய வேண்டி போராடி வருகின்றனர்.

வாக்குறுதி கொடுத்த திமுக ஆட்சிக்கு வந்தும் 28 மாதமாக பணிநிரந்தரத்திற்கு காத்து வருகின்றனர் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள்.

முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தால் மட்டுமே பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய முடியும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

திமுக கூட்டணி கட்சிகள் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தமிழக வாழ்வுரிமை கட்சி, கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி, மனித நேய மக்கள் கட்சி போன்றவை பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி உள்ளது.

மேலும் அதிமுக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய ஜனநாயக கட்சி,புரட்சி பாரதம் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் போன்றவை வலியுறுத்தி உள்ளது.

எந்த கூட்டணியிலும் இல்லாத கட்சிகள் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்,அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், தேசிய முற்போக்கு திராவிட கழகம், மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, மனித நேய ஜனநாயக கட்சி, ஆம் ஆத் மீ கட்சி, SDPI கட்சி, மே 17 இயக்கம் என பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி உள்ளது.

திமுகவே இந்த கோரிக்கையை 10 ஆண்டாக வலியுறுத்தி வந்தது.

பின்னர் உங்கள் தொகுதி ஸ்டாலின், விடியல் தர போறாரு ஸ்டாலின் என்ற திமுக நிகழ்ச்சி மற்றும் தேர்தல் அறிக்கையில் 181வது வாக்குறுதியிலும் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வோம் என நம்பிக்கை கொடுத்த திமுக அதை நிறைவேற்றும் இடத்தில் உள்ளது.

அதிமுக ஆட்சியில் கடைசியாக உயர்த்தி வழங்கிய ரூபாய் 10 ஆயிரம் சம்பளம் தான் இன்றளவும் பெறுகின்றனர் என்பது கவலை அளிக்கிறது.

காலமுறை சம்பளம் வழங்க வேண்டும். பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கையை முதல்வர் மனிதநேயத்துடன் நிறைவேற்ற வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கை ஆகும். இவ்வாறு பகுதிநேர ஆசிரியர் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தெரிவித்து உள்ளார்.


எஸ்.செந்தில் குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்,
பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு
செல் : 9487257203

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *