தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்.
ஜோ.லியோ.

விவசாயிகள் வஞ்சிக்கும் தமிழக அரசு கண்டித்து பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்.

தமிழக விவசாயிகளுக்கு காவிரி நீரை பெற்றுத் தராத திமுக அரசை கண்டித்து பாஜக விவசாய அணி பொதுச் செயலாளர் பூண்டி.வெங்கடேசன் தலைமையில்
கண்டன ஆர்ப்பாட்டம்.

திருவையாறு பேருந்து நிலையத்தில்
டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு காவிரியிலிருந்து வழக்கமாக ஆண்டுதோரும் தமிழகத்துக்கு கொடுக்க வேண்டிய காவிரி தண்ணீரை தர மறுக்கும் கர்நாடகா அரசை கண்டித்து பாரத ஜனதா கட்சி மாநில விவசாய அணி பொதுச் செயலாளர் பூண்டி.வெங்கடேசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சை மாவட்டத்தில் இந்த ஆண்டு பயிரிடப்பட்ட குருவைப் பயிர்கள் உரிய தண்ணீர் வரத்து இல்லாமல் காய்ந்து கருகி வருகிறது, இந்த நிலையில் தமிழ்நாடு அரசு விவசாயிகளை கண்டுகொள்ளாமல் பாராபட்சமாக செயல்படுகிறது.

விவசாயிகளின் நலன் கருதி பாரத பிரதமர் கொண்டு வந்த பயிர் காப்பீடு திட்டத்தை முறையாக தமிழக அரசு நடைமுறை செய்திருந்தால், இன்று விவசாயிகள் பயிரிட்ட நெற்பயிர்கள் காய்ந்து நஷ்டம் ஏற்படும் போது விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கிடைத்திருக்கும்.

ஆனால் தமிழக திமுக அரசு விவசாயிகளை வஞ்சிக்கும் நிலையில் முறையாக பாரத பிரதமரின் விவசாய காப்பீடு திட்டத்தை செயல்படுத்தாததால் டெல்டா மாவட்ட விவசாயிகள் இன்று விளைவிக்கப்பட்ட நெற்பயிர்கள் காய்ந்து கருகியது, அவர்கள் அதற்காக செலவிட்ட தொகையை ஈடு செய்ய இயலாமல் நஷ்டப்பட்டு உள்ளார்கள்.

இந்த தமிழக அரசின் விவசாயிகள் விரோத போக்கை கண்டித்து பாரதக் கட்சியின் பாஜக விவசாய அணிகள் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் சதீஷ்குமார் கண்டன உரையாற்றினார். மாவட்ட விவசாய அணி தலைவர் ஐயம்பெருமாள், மாவட்ட விவசாய அணி துணைத் தலைவர் வீரமணி, மாவட்ட பொது செயலாளர் தங்க.கென்னடி, ஒன்றிய தலைவர்கள் சேட் (எ) விஜயராகவன், இனியன். விவேக். நிர்வாகிகள் ஜீவா சிவக்குமார், கிருத்திகா நாராயணமூர்த்தி ஹரி பிரசாத் குமார் டேவிட் வீரமணி மற்றும் பொதுமக்கள் விவசாயிகள் ஏராளமான இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *