எஸ்.செல்வகுமார். செய்தியாளர் சீர்காழி
சீர்காழி அருகே வழுதலைகுடி கிராமத்தில் பழமை வாய்ந்த ஐயனார், வீரனார் கோவில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. குமரக் கட்டளை தம்பிரான் சுவாமிகள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வழுதலைக்குடி கிராமத்தில் பழமை வாய்ந்த பூரண புஷ்கலா அம்மனுடனாகிய அய்யனார், வீரனார் ஆலயம் அமைந்துள்ளது. இந்த கோவில் புனரமைக்கப்பட்டு இன்று வெகு விமர்சையாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோவில் கும்பாபிஷேகம் கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது.
இரண்டு கால யாகசாலை பூஜைகள் முடிவடைந்து யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரை ஆச்சாரியர்கள் தலையில் சுமந்து கோவிலை சுற்றி வலம் வந்தனர் தொடர்ந்து கோபுர உச்சிக்கு சென்று புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.
இந்த கும்பாபிஷேகத்தில் குமரக் கட்டளை தம்பிரான் சாமிகள் பங்கேற்று கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். தொடர்ந்து கோவில் கருவறையில் உள்ள ஐய்யனார் மற்றும் வீரனார் சுவாமிகளுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
இந்த கும்பாபிஷேக விழாவில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள உள்ளூர் பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.