கந்தர்வகோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டையில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பாக முப்பெரும் விழா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கந்தர்வவோட்டையில் நடைபெற்றது .

ஒன்றிய தலைவர் பழனிவேல் தலைமை தாங்கினார் .. ஒன்றியச் செயலாளர் சின்ன ராஜா அனைவரையும் வரவேற்றார்.

இவ்விழாவில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில பொதுச் செயலாளர் முனைவர் மன்றம் நா. சண்முகநாதன் கலந்துகொண்டு விழா பேருரை ஆற்றி பேசும் பொழுது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் பள்ளிக்கல்வித்துறையில்கொண்டுவரப்பட்ட காலை உணவு திட்டம், எண்ணம் எழுத்தும் திட்டம் நான் முதல்வன் திட்டம், இல்லம் தேடி கல்வி திட்டம்,புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருவதற்கு நன்றி தெரிவித்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பொற்கால ஆட்சியில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கனிவோடு ஏற்றுக்கொண்டு படிப்படியாக நிறைவேற்றி வருகிறார்.

இன்னும் ஒரு சில வாக்குறுதிகள் அனைத்தையும் விரைவில் நிறைவேற்றுவார் என்றும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில பொன்விழா மாநாட்டிற்கான ஆயத்த கூட்டத்தை மிகச் சிறப்பாக ஏற்படுத்திய இன்றைய பொறுப்பாளர்கள், ஆசிரியர் மன்றத்தின் முனைவர் பட்டம் பெற்ற ஆசிரியர்கள், கடந்த ஆட்சியில் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைச்சென்ற செம்மலை ஆகியோரையும் பாராட்டி நினைவுப் பரிசு வழங்கினார்.

அதனை தொடர்ந்து
ஆசிரியர் மன்றத்தின் மாவட்ட செயலாளர் வீ.ஜோதிமணி பேசுகையில் கடந்த ஆட்சியின் போது ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்காமல் போராடிய ஆசிரியர்களுக்கு 17பி வழங்கி அவர்களுடைய பதவி உயர்வை பறித்தார்கள் முன்னாள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்ற பின் ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற்றனர் .
தமிழ்நாட்டிலேயே புதுக்கோட்டை மாவட்டம் ஆசிரியர் மன்றத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் என்ற ஒரு சிறப்பான முகாமை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு மாவட்ட கிளைகள் சார்பாக ஒன்றிய பொறுப்பாளருக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.
இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் வீ. ஜோதிமணி மாவட்டத் தலைவர்
ம. ஜெயராஜ் மாவட்டப் பொருளாளர் இரா மலர்மன்னன், மாநில சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் ந.ரவிச்சந்திரன் புதுக்கோட்டை ஒன்றிய செயலாளர் க.சு செல்வராசு ஆசிரியர் மன்றத்தின் கந்தர்வகோட்டை ஒன்றியகௌரவத்தலைவர்
ச. சரவணன் ,மாநில பொதுக்குழு உறுப்பினர் ம.சிவா சோ விஜயலட்சுமி, வெ. மீனாம்பாள், சு.பொன்கலன்,ஆ பாஸ்கர் வாழ்த்துரை வழங்கினார்கள் … த. கோவிந்தராசு ,ப. செல்லச்சாமி ,த.. சங்கர் ,வ. தங்கதுரை ஆகியோர் ஏற்புரை வழங்கினார்கள் கந்தரவ கோட்டையில் உள்ள ஆசிரியர் மன்ற பொறுப்பாளர்கள் மற்ற உறுப்பினர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களில் இருந்தும் ஆசிரியர் மன்ற ஒன்றிய பொறுப்பாளர்கள் அனைவரும் இவ்விழாவில் பங்கேற்றனர் .
.நிறைவாக ஒன்றிய பொருளாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *