சகாதேவன் செய்தியாளர் போச்சம்பள்ளி கிருஷ்ணகிரி மாவட்டம்
பர்கூர் அடுத்த மல்லப்பாடியில் உள்ள மளிகை கடையில் தீப்பிடித்து 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருட்கள் எரிந்து நாசம்
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்துள்ள மல்லப்பாடியில் உள்ள வரதராஜன் என்பவர்கள் மகன் செல்வம் 50 என்பவருக்கு சொந்தமான செல்வம் மளிகை கடை சுமார் 20 ஆண்டு காலமாக நடத்தி வருகிறார் இந்த நிலையில் இன்று காலை சுமார் 9 மணியளவில் மின் கசிவு காரணமாக தீப்பிடித்து தீப்பிடித்ததை அறிந்த செல்வம் பர்கூர் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தார் அங்கு விரைந்து வந்த 10 மேற்பட்ட தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரமாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர் இந்த கடையில் சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் உள்ள நிலையில் தீப்பிடித்ததின் காரணமாக சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம் ஆனது அரிசி 50 மூட்டை எண்ணெய் 30 பெட்டி பத்து மூட்டை சர்க்கரை மற்றும் ஷாம்பு வகைகள் பருப்பு வகைகள் ஆகியவை சுமார் பத்து லட்சத்திற்கும் மேலான பொருட்கள் எரிந்து நாசமானது