ஜே சிவகுமார், திருவாரூர் மாவட்ட செய்தியாளர்
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் முகப்பு வாயில் எதிரே உள்ள பயணிகள் நிழலகத்தை சீரமைக்க வேண்டும் சிஐடியு கோரிக்கை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக முகப்பு வாயில் எதிரே உள்ள பேருந்து நிழலகங்கள் சுகாதாரமின்றியும், புதர்கள் மண்டியும் உள்ளது.

இதை உடனே சீரமைக்க வேண்டும் என சிஐடியு மாவட்ட குழு சார்பாக. தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்புறம் வாயில் பகுதியான திருவாரூரில் இருந்து தஞ்சாவூர் சாலையில் எதிர்ப்புறம் அமைந்துள்ள பேருந்து பயணிகளின் நிழலகம் பராமரிப்பின்றி மிக மோசமாக சுகாதாரம் கேடாகவும், பயணிகள் அமரும் இருக்கைகள் சுத்தம் சுகாதாரம் இன்றி உள்ளது.மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இடது புறம் அதாவது மேற்கு பகுதியில் உள்ள தண்டலை ஊராட்சி நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகின்ற பேருந்து பயணிகளின் நிழலகத்தின் மேற்கூரை சிதிலடைந்து உடைந்து மோசமான நிலையில் இருப்பதால் வெயில் மற்றும் மழைக்காலங்களில் பேருந்து பயணிகள் பயன்படுத்த முடியாத நிலையிலும் பயணிகள் இருக்கைகள் பராமரிப்பு இன்றி சேதம் அடைந்துள்ளது.
மேலும் அப்பகுதியில் வேகத்தடை இல்லாமல் உள்ளது
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலை மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் செல்லும் சாலைகள் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை உயரமாக இருப்பதால் அலுவலகத்தில் இருந்து சாலைக்கு வரும்போது இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாற்றமாகவே செல்லும் நிலை சாலையில் பயணிக்கும் சூழலில் உள்ளது. ஆகவே இந்த இரு இடங்களிலும் விபத்து ஏற்படாத வகையில் சமநிலைப்படுத்தி வேகத்தடை அமைக்க வேண்டும்,
பேருந்து நிலையங்களையும் உடனடியாக சீர் செய்ய வேண்டும் என திருவாரூர் மாவட்ட சிஐடியு சார்பில் அமைப்பின் மாவட்ட செயலாளர் டி.முருகையன்,தலைவர் எம்.கே.என்.அனிபா ஆகியோர் உள்ளிட்ட மாவட்ட குழு சார்பாக மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்