பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசத்தில் தஞ்சை வடக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் இல்லந்தோறும் இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கும் நிகழ்ச்சி …

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அண்ணாசிலை கடை வீதியில் தஞ்சை வடக்கு மாவட்ட இளைஞரணி சார்பாக இல்லந் தோறும் இளைஞரணி உறுப்பினர் சேர்க்கும் நிகழ்ச்சி தஞ்சை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான
கல்யாணம்சுந்தரம் தலைமையில் நடைபெற்றது .
மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மணிகண்டன் வரவேற்று பேசினார் மாநில இளைஞரணி துணை செயலாளர் இளையராஜா முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் பாபநாசம் வடக்கு ஒன்றிய செயலாளர் தாமரைச்செல்வன், பாபநாசம் தெற்கு ஒன்றிய செயலாளர் நாசர் ,பாபநாசம் பேரூர் கழக செயலாளர் கபிலன், பாபநாசம் ஒன்றிய பெருந்தலைவர் சுமதி கண்ணதாசன் , பாபநாசம் ஒன்றிய. இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் மணிமாறன், சிட்டிபாபு ,பாபநாசம் பேரூர் இளைஞரணி அமைப்பாளர் கோபி ஒன்றிய கழக அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் மற்றம் பேரூர் ஒன்றிய சார்பணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.