காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னால் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் 78 வது பிறந்தநாளையொட்டி கோவையில், கோவில்களில் சிறப்பு பூஜை ,ஆதரவற்றோர் இல்லங்களில் அன்னதானம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன…

முன்னான் மத்திய நிதியமைச்சரும்,காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்,நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான ப.சிதம்பரம் 78 வது பிறந்தநாளையொட்டி,அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் ஜெ.ஹரிஹரசுதன் தலைமையில் கோவையில் சிறப்பு பூஜைகள்,வழிபாடு,அன்னதானம்,என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

நிகழ்ச்சியில், இந்த சிறப்பு வழிபாட்டில் முன்னால் சட்டமன்ற உறுப்பினர் எம்.என்.கந்தசாமி, பி.எஸ்.சரவணகுமார், கோவை செல்வன், சோபனா செல்வன், சௌந்தர குமார் ஆகியோர் முன்னிலை வகுத்தனர்.பிறந்த நாள் நிகழ்ச்சியில் முன்னதாக ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடு நடைபெற்றது..

தொடர்ந்து ஐயப்பன் கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் நடைபெற்றது.இதே போல மாலை திருச்சி ரோட்டில் உள்ள ஜங்கிள் பீர் அவுலியா தர்காவில் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது.இந்நிகழ்ச்சியில், தென்றல் நாகராஜ், லூயிஸ், கருணாகரன், பாஸ்கர், சௌந்தர், குணசேகர்,ஆர்.கே. ரவி, காமராஜ், டென்னிஸ் செல்வராஜ், கருடா பாலு, குரியன், மதியழகன், தவுலத் கான், ஜோதி முத்துக்குமார், காமராஜ் துல்லா, லக்ஷ்மண சுவாமி, பறக்கும் படை ராஜ்குமார், மோகன், சிறில், தனபால், ஸ்ரீகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *