புவனகிரி செய்தியாளர் வீ.சக்திவேல்
புவனகிரி அதிமுக நகர கழகத்தின் சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 115 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது
புவனகிரி
கடலூர் மாவட்டம் புவனகிரி வெள்ளாற்று பாலத்தின் முகத்தில் அதிமுக கழகத்தின் சார்பில் நகர கழக செயலாளர் செல்வகுமார் தலைமையில் பேரறிஞர் அண்ணாவின் 115 வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக புவனகிரி அதிமுக சட்டமன்ற உறுப்பினரும் கடலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் ஆ.அருண்மொழித்தேவன் அவர்கள் கலந்து கொண்டு பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
பின்னர் நகர கழக செயலாளர் செல்வகுமார் அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற தலைவர் முருகமணி மாவட்ட அம்மா பேரவை கழகச் செயலாளர் உமா மகேஸ்வரன் மாவட்ட மாணவர் அணி செயலாளர் வீரமூர்த்தி ஒன்றிய கழக செயலாளர்கள் சி .என் . சிவப்பிரகாசம் .சீனிவாசன் .விநாயகமூர்த்தி .ஊராட்சி கழக செயலாளர் ஏ .வி. ஜெயசீலன் . ஒன்றிய துணைச் செயலாளர் பிரித்திவி. ஓட்டுநர் அணி ஒன்றிய செயலாளர் பிரகாஷ் ஆகியோர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கும் கழகத் தொண்டர்களுக்கும் இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடினார்கள்