கந்தர்வகோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அரியாணிப்பட்டி இல்லம் தேடிக் கல்வி மையத்தில் பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட கந்தரவக்கோட்டை இல்லம் தேடிக் கல்வி மைய ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு குறித்து பேசியதாவது

தந்தை பெரியாரின் இயற்பெயர் ஈ. வெ. ராமசாமி செப்டம்பர் 17, 1879 பிறந்தார் .மூட நம்பிக்கை ஒழித்து மானுட விடுதலையை ஏற்படுத்த பாடுபட்ட தந்தை பெரியார் அதற்கு தடையாய் இருந்த அனைத்தையும் எதிர்த்தார். சமூக சீர்திருத்தவாதி, சுயமரியாதைக்காரர், பகுத்தறிவுவாதி, பெண்ணியவாதி என பல தளங்களில் இயங்கியவர் சுயமரியாரியாதை இயக்கம் 1925ஆம் ஆண்டு பெரியாரால் தோற்றுவிக்கப்பட்டது.

இதன் முக்கிய கொள்கை பரப்புரையாக, சமுதாயத்தின் ஏளனத்திக்குரிய மூடபழக்க வழக்கங்களையும், பரம்பரை வழக்கங்களையும் பின்பற்றப்படுவதை தொடர்ந்து எதிர்க்கும் நிலையை எடுத்தது.

மக்களை அறிவின்மையினிருந்து மீட்டெடுக்கவும், தெளிவுடையவர்களாக மாற்றவும் இதன் கொள்கைகள் வழிவகை செய்தன. பகுத்தறிவு சிந்தனையுடன் மக்களின் செயல்பாடுகள் இருக்க வலியுறுத்தின.

பகுத்தறிவாளர்கள் பின்பற்றப்படவேண்டிய கடமைகளாக பலவற்றை இவ்வியக்கம் வலியுறுத்தியது என்று பேசினார்.
இந்நிகழ்வில் தன்னார்வலர்கள் ராதிகா, புவனேஸ்வரி, காயத்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *