சோழவந்தான்
சோழவந்தானில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 1.4.78 மாணவிகளுக்கு வாடிப்பட்டி அருணா அம்மாவின் மக்கள் குறைதீர்க்க வழிகாட்டும் மையம் சார்பாகஅ.இ.அ.தி.மு.க.நகர செயலாளர் அசோக்குமார் தலைமையில் திருக்குறள் புத்தகங்களை இலவசமாக வழங்கப்பட்டது.
மேலும் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பைபாஸ் ரோட்டில். செப். 28.ம் தேதி நடைபெற உள்ள காட்டு விலங்குகள் உலகம் கண்காட்சி பார்வையிட இலவச நுழைவு டிக்கெட்டுகளையும் மாணவியர்களுக்கு வழங்கினர்.
இதேபோல்.மேட்டுநீரேத்தான் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி மாணவ மாணவிகளுக்கு காட்டு விலங்குகள் உலகம் கண்காட்சி இலவச நுழைவு டிக்கெட்களை வழங்கப்பட்டது இந்நிகழ்வில் பள்ளி தலைமையாசிரியை தீபா.மற்றும் ஆசிரியர்கள்.என பலர் உடனிருந்தனர்.