அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்டுகடையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
எம்ஜிஆர் மன்ற செயலாளர் தண்டலை மாதவன் ஏற்பாட்டில் சோழவந்தான் தொகுதி பொறுப்பாளரும் அலங்காநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளருமான வழக்கறிஞர் கோடீஸ்வரன், கலந்து கொண்டு மாலையை வைத்து மரியாதை செலுத்தினார்.
இதில் நகரச் செயலாளர் ராஜபிரபு, ஒன்றிய இணைச் செயலாளர் வேல்முருகன், மாணவரணி செயலாளர் அசோக், விவசாய பிரிவு செயலாளர் பிச்சை, பிரதிநிதி சுரேஷ், எம்ஜிஆர் மன்றம் ராஜா, வார்டு செயலாளர் மெடிக்கல் சுதந்திரபாண்டியன், சிறுபான்மை அணி செயலாளர் அய்யூர்ரியாஸ்கான், மற்றும் நிர்வாகிகள் நீதி, கணேசன், இளைஞரணி துணை செயலாளர்
கேட்டுகடை மணிகண்டன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.