தூத்துக்குடி பிரதான சாலையான திருச்செந்தூர் திருப்பத்தில் பெரியபள்ளம் சீர் செய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் MS.முத்துகோரிக்கை……..
தூத்துக்குடி பிரதான சாலையாக தமிழ்ச் சாலை உள்ளது. இதன் வழியாகத்தான் திருநெல்வேலி மற்றும் திருச்செந்தூர் மார்க்கமாக செல்லும் அனைத்து வாகனங்களும் சென்று வருகின்றன. அது போல் அம்பேத்கார் சிலை அருகில் தான் திருச்செந்தூர் செல்லும் வாகனங்கள் திரும்பி திருச்செந்தூருக்கு செல்ல முடியும் .
அங்கு தான் திருச்செந்தூர் மார்க்கமாக செல்லும் பேருந்திற்கு மக்கள் காத்திடுப்பார்கள்.
தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சியும் மாவட்ட நிர்வாகவும் மழை தேங்கும் இடங்களை கண்டறிந்து உடனடியாக மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்நிலையில் நேற்று பெய்த மழையினால் அம்பேத்கார் சிலை அருகே திருச்செந்தூர் ரோடு திருப்பத்தில் மழைநீர் தேங்கி சாலை பழுந்தடைந்து மிக ஆழமான பற்றம் ஏற்பட்டுள்ளது. அது சீர் செய்யப்படவில்லை யெனில் விபத்துக்கள் ஏற்படும் நிலை உள்ளது.
மேலும் படிப்படியாக இந்த பள்ளம் தமிழ்ச் சாலையிலும் விரிவடையும் நிலை உள்ளது.
எனவே மாநகராட்சி நிர்வாகமும் நெடுஞ்சாலை துறை நிர்வாகமும் தலையிட்டு அம்பேத்கார் சிலை அருகே உள்ள பள்ளத்தை போர்க்கால அடிப்படையில் செப்பனிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாநகரக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.....
நன்றி
Ms.முத்து
மாநகர செயலாளர்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
தூத்துக்குடி