தூத்துக்குடி வெள்ள பாதித்த மக்களுக்கு நல திட்ட உதவிகள்
சோகோ நிறுவனர் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு வழங்கினார்.
தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களை ஒட்டிய மாவட்டங்களான கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் இயற்கை பேரிடர் ஏற்பட்டுள்ளது.

வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளம் ஏற்கனவே பல சவால்களை எதிர்கொண்டுள்ள நடுத்தர குடும்பங்கள், மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பங்களின் வாழ்க்கையை கடுமையாக பாதித்துள்ளது.மிகுந்த மன அழுத்தம் மற்றும் சிரமம் நிறைந்த இந்த நேரத்தில், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் துன்பங்களுக்கு உதவவும், அவற்றைப் போக்கவும் நம்மால் இயன்றதைச் செய்ய வேண்டும்.
இதற்காக, மளிகை பொருட்கள், படுக்கை விரிப்பு, துண்டு, , பால் பவுடர், தண்ணீர் பாட்டில், ரஸ்க், பிஸ்கட், டெட்டால், தீப்பெட்டி, போன்ற அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கிட் மற்றும் அரிசி, முதலியன பொருட்கள் குடும்பங்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையைத் தொடர உதவுவதோடு, இந்த சோதனைக் காலத்தில் ஓரளவு ஆறுதலையும் அளிக்கும் வகையில்
தமிழ் சேவா சங்கம் சார்பில் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி, ரத்தினபுரி,காயல்பட்டினம் இஸ்லாமிய பகுதிகள்மற்றும் அனைத்து சமுதாய மக்கள் வேறுபாடு இல்லாமல் வெல்லம் சூழ்ந்த பல்வேறுபகுதிகளுக்கு
சோகோ நிறுவனர் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல திட்ட உதவிகளை வழங்கினார்.
அவருடன் தமிழ் சேவா சங்க நிறுவனர் ஞான சரவணவேல் மற்றும் மாநில நிர்வாகிகள் மண்டல அமைப்பாளர் பலர் கலந்து கொண்டனர்.