கிறிஸ்துமஸ் விழா” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் தலைமையிலும், வசன கர்த்தாவும், நடிகருமான அப்பா பாலாஜி, மனோகரன், அழகப்பன், செந்தில் ராஜன் ஆகியோர் முன்னிலையிலும் கிறிஸ்துமஸ் விழா மிக மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
சிறப்பு விருந்தினராக பாக்கிய லெட்சுமி, ஒளிப்பதிவாளர் சண்முகம் கலந்து கொண்டு அனைவருக்கும் கேக் வழங்கினார்கள். விழாவில் கருங்காலகுடி சந்துரு, முருகேசன், ஸ்ரீமான் சரவணன், ஜெயபால், பால்பாண்டி, ஒளிப்பதிவாளர் கண்ணன், முருகன், எழுத்தாளர் விவேக் ராஜ், அழகு லெட்சுமி, ஆனையூர் லட்சுமி, அமல்ராணி, மஞ்சுளா, அங்கிதா, ரிஷிதா, தருண், ஹர்ஷவர்த்தினி, வர்ஷா, ஹனிஷ்கா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.