ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்

திருவாரூரில் சிறு தொழில் சங்கத்தின் சார்பாக மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டி மனித சங்கிலி பேரியக்கம்

கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசு அமல்படுத்திய மின் கட்டண உயர்வால் சிறு தொழில் துறை நான்கு முனை தாக்குதலால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

  1. யூனிட் கட்டண உயர்வு:
    6.35 யிலிருந்து .7.65
  2. நிலைகட்டண உயர்வு
    0 – 50 kw வரை
    35.00 லிருந்து .77.00
    50 – 112 kw வரை
    35.00 லிருந்து .153.00
  3. Peak hours charges
  4. வருடாந்த கட்டண உயர்வு
    உதாரணத்திற்கு
    100kw மின் இணைப்பு பெற்றுள்ள நிறுவனம் மாதம் 1-க்கு நிலைகட்டணம் 3500 செலுத்தி வந்த நிலையில் இப்போது.15,300 ஆக (தொழிற்சாலை ஓட்டினாலும் ஓட்டாவிட்டாலும்) கட்ட வேண்டி உள்ளது
    இவைகளுக்காக மாநிலம் முழுவதும் உள்ள சிறு தொழில் அமைப்புகள் தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு என்ற அமைப்பாக போராடியதில் சில வெற்றிகளை பெற்றிருந்தாலும் பிரதான கோரிக்கையான 430% நிலைக்கட்டண உயர்வை அரசு பரிசீலிக்கவில்லை தொழில் முனைவோர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் இந்த உயர்வை ரத்து செய்ய. முதல்வரின் கவனத்தை ஈர்க்க அனைத்து மாவட்டங்களிலும் மனித சங்கிலி இயக்கம் நடத்த கூட்டமைப்பு முடிவெடுத்தபடி
    திருவாரூரில் 27.12.2023 காலை மணி 9.00 முதல் 11.00 வரை பழைய பேருந்து நிலையம் முதல் இரயில் நிலையம் வரை மனித சங்கிலி இயக்கம் நடைபெற்றது
    மாவட்ட தலைவர் .அருண்காந்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கௌரவத்தலைவர் ரவிச்சந்திரன் பொருளாளர் சொக்கலிங்கம் அரிசி ஆலை சங்க தலைவர் குணசேகரன் மற்றும் நிர்வாகிகள் திருவாரூர் வர்த்தகர் சங்க தலைவர் பாலமுருகன் மற்றும் நிர்வாகிகள் முத்துப்பேட்டை இரால் பண்ணை உரிமையாளர்கள் சங்க தலைவர் சிதம்பரம் மற்றும் நிர்வாகிகள் மற்றும் மாவட்டம் முழுவதுமிருந்து 500க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்கள் மற்றும் ஆண் பெண் தொழிலாளர்கள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *