பாபநாசம் அருகே டிராக்டர்களில் ஆன்லைன் மூலம் பதிவு செய்து, மணல் ஏற்றுவதை தடுப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டி..
டிராக்டர் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்..

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கபிஸ்தலம் அருகே புத்தூரில் மணல் குவாரி இயங்கி வருகிறது.

இதில் ஆன்லைன் மூலம் லாரிகளுக்கு மணல் வழங்கப்பட்டு வந்த நிலையில், தமிழக அரசின் ஆன்லைன் மூலம் டிராக்ட்டர்களுக்கு பதிவு செய்து கட்டணம் செலுத்தி மணல் ஏற்றுவதை தடுப்புவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தடையின்றி டிராக்டர்களில் மணல்களை வழங்க அரசு ஆவண செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பாபநாசம் வட்டார டிராக்டர் உரிமையாளர் சங்கம் சார்பில், கும்பகோணம் திருவையாறு தேசிய நெடுஞ்சாலை புத்தூர் மண்ணியாறு தலைப்பில் டிராக்டர்களை நிறுத்தி வைத்து, பாபநாசம் வட்டார டிராக்டர் உரிமையாளர் சங்கம் சார்பில் ஏராளமானோர் கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பேச்சுவார்த்தைக்கு அழைத்ததன் பேரில் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *