திருவாரூரில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தமிழ்நாடு சோழிய வேளாளர் சங்கம் சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

திருவாரூரில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தமிழ்நாடு சோழிய வேளாளர் சங்கம் சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நகருக்கு உட்பட்ட மைதீன் கோவிந்தராஜ் ரெசிடென்சி தனியார் கருத்தரங்க கூட்ட அரங்கில் நடைபெற்றது ஆலோசனைக் கூட்டத்திற்கு தமிழ்நாடு சோழிய வேளாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் மைதின் ஜி சுவாமிநாதன் தலைமை வகித்தார்

திருவாரூர் மாவட்ட தலைவர் பி கண்ணதாசன் மாவட்ட செயலாளர் ஜி செந்தில்நாதன் மாவட்ட சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் வி பி கே டி மணிவண்ணன் துணைத் தலைவர்கள் ஆர் வேதநாயகம் கே ஆர் சந்திரசேகரன் என் கார்த்திகை சாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்

ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் சங்க வளர்ச்சி குறித்து ஆலோசனை வழங்கி பேசினார்கள் நிகழ்வின்போது திருவாரூர் நகரத் தலைவர் கு அண்ணாமலை நகர செயலாளர் யமுனா வி நடராஜன் நகர பொருளாளர் மைதீன் ஜி. சுந்தரேஸ்வரன் தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் ஜவகர் உள்பட மாவட்ட நகர நிர்வாகிகள் மற்றும் சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் தமிழ்நாடு சோழிய வேளாளர் சங்கம் சார்பில் தினசரி காலண்டர் மற்றும் ஸ்வீட் பாக்ஸ் வழங்கினார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *