மதுரையில் ஹஜ்ரத் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா தர்கா நிர்வாகம் மற்றும் ரஹமத் கிளினிக் சார்பாக மருத்துவர் முகமது ரஃபி இணைந்து நடத்திய
இலவச மருத்துவ முகாம் திருப்பரங்குன்றம் தர்கா பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்றது.
இந்த மருத்துவ முகாமை மேனேஜிங் டிரஸ்டி ஹாஜி சீனியர் ஒஜிர் கான் மற்றும் ட்ரெஸ்டிகள் துவக்கி வைத்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்விற்கு தர்கா பள்ளிவாசல் செயலாளர் ஆரிப்கான் வரவேற்று கூறினார்.
மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் பிஸ்மில்லா கான் மற்றும் மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் பொருளாளர் அப்துல்காதர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இறுதியாக தர்கா பள்ளிவாசல் தலைவர் அக்பர் கான்
நன்றி கூறினார் முகாமில் திரளான பொதுமக்கள்கலந்து கொண்டனர்.