தற்காலிகமாக மூடியுள்ள கோரமண்டல் தொழிற்சாலையை நிரந்தர தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட ஆட்சியர் உறுதி

தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது மக்கள் ஒத்துழைப்பு அளித்து போராட்டத்தை கைவிட வேண்டும் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

சென்னை எண்ணூர் பெரியகுப்பம் பகுதியில் செயல்பட்டு வரும் கோரமண்டல் தொழிற்சாலையில் கடந்த 26 தேதி அன்று நள்ளிரவு குழாயில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவால் மீனவ மக்கள் மூச்சு திணறல் ஏற்பட்டு சுமார் 45 பேர் பதிக்கப்பட்டு அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில் கோரமண்டல் தொழிற்சாலை நிரந்தரமாக மூட வலியுறுத்தி 8 வது நாளாக இன்று பெரியகுப்பம் சின்ன குப்பம் மீனவர்கள் அறவழியில் பேராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். …..

மீனவர்களின் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்த தலைவர்கள், பிரதிநிதிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இதனையடுத்து
எண்ணூர் மீன்வளத்துறை ஆய்வாளர் அலுவலகத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடைப்பெற்றது.

திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் தலைமையில் நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் சென்னை மாவட்ட ஆட்சியர் ராஷ்மி சித்தார்த் ஜகடே, வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.கலாநிதி வீராசாமி, மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம், தண்டையார்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் இப்ராஹிம் மீன்வளத்துறை இணை இயக்குனர் சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

இந்த கருத்து கேட்பு கூட்டத்தில்
33 மீனவ கிராமத்தை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்று தங்களது கருத்துக்களை முன் வைத்து பேசினார்.

சுமார் இரண்டு மணிநேரம் நடைப்பெற்ற கருத்து கேட்பு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் சந்தித்து பேசிய சென்னை மாவட்ட ஆட்சியர் ராஷ்மி சித்தார்த் ஜகடே

இந்த சம்பவத்திற்கு டெக்னிக்கல் எக்ஸ்பர்ட் கமிட்டி அமைக்கப்பட்டு ஆய்வு நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்

தற்காலிகமாக தொழிற்சாலை இயங்குவதை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது

இந்த கூட்டத்தில் மீனவ நிர்வாகிகள் கூறிய பிரச்சனைகளை பதிவு செய்துள்ளோம்

இதனைத் தொடர்ந்து தமிழக அரசுக்கு முறையாக எடுத்துக் கூறி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்

கோரமண்டல் பிரச்சனைக்கு
நிரந்தர தீர்வு காணப்படும் அதுவரைக்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்

சிபிசிஎல் ஆயில் கசிவு அமோனியா வாயு கசிவு இருந்தாலும் அரசாங்கம் தொடர்ந்து கண்காணிப்பு கருவிகளை வைத்து கண்காணித்துக் கொண்டிருக்கிறது

மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கவும் இதுபோன்று சம்பவம் அடுத்து வரும் காலத்தில் வரக்கூடாது அதற்கு கண்டிப்பாக நடவடிக்கை எடுத்துக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்

அரசாங்கம் முடிவெடுப்பதற்கு கால அவகாசம் தரும்படி போராட்டத்தை ஒத்திவைக்க கேட்டுக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *