பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில் ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான கார்..
காரில் பயணம் செய்தவர்கள் பலத்த காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே, கும்பகோணத்தில் அமைந்துள்ள கோயிலுக்கு சென்று விட்டு தஞ்சாவூர் நோக்கி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. காரை தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை பகுதி அண்ணா நகர் பகுதியில் வசித்து வரும் சேர்ந்த கணேசன் (50) என்பவர் ஓட்டி வந்தார்.
உடன் அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஓட்டுனர் உட்பட நான்கு பேர் கும்பகோணம் கோயிலுக்கு சென்று விட்டு திரும்பும் வழியில் அய்யம்பேட்டையில் உள்ள நெடுந்தெரு பகுதியை கார் வந்தடைந்ததும் கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் அமைந்துள்ள வாய்க்காலில் தலை குப்புற கவுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த அனைவரும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அய்யம்பேட்டை காவல் ஆய்வாளர் ஐஸ்வர்யா தலைமையிலான போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.