அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜனவரி 16ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்ப்பாட்டு பணிகள் கடந்த ஒரு வார காலமாக நடைபெற்று வருகிறது .

இதில் அங்கு அமைந்துள்ள மஞ்சமலை வாடிவாசல் பகுதி முழுவதும் சுத்தப்படுத்தப்பட்டு வாடிவாசல் பார்வையாளர் மாடம் ஆகியவை வர்ணம் பூசும் பணி முடிவடைந்துள்ளது.

இந்த நிலையில் விழா மேடை மற்றும் இரண்டு அடுக்கு தடுப்பு வேலி பார்வையாளர் மேடை ஆகிய அமைப்பதற்கான உள்ளிட்ட விழா நிகழ்ச்சிகள் தொடங்குவதற்காக முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி இன்றுகாலை 10 மணி அளவில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் சுமதி பாண்டியராஜன், தலைமை தாங்கினார் விழா கமிட்டி நிர்வாகிகள் மலைச்சாமி, பிரபு, ஜோதிதங்கமணி. உறுப்பினர்கள் சங்கரலிங்கம் ஜெயராமன், கிருஷ்ணன், குமரேசன், சுரேஷ், சந்திரன், ராஜமாணிக்கம், முத்துச்செல்வம், மற்றும் துணைத் தலைவர் ராமராஜ், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பேரூராட்சி செயல் அலுவலர் தேவி, வரவேற்றார் .
சிறப்பு அழைப்பாளர்களாக திமுக வடக்கு மாவட்ட அவைத் தலைவர் எம்.ஆர்.எம். பாலசுப்பிரமணியன், நகர செயலாளர் மனோகரவேல்பாண்டியன், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, உள்ளிட்ட விழாக்கமிட்ட நிர்வாகிகள் பேரூராட்சி கவுன்சிலர்கள் காவல்துறையினர் உள்ளிட்ட பொதுமக்கள் பலர் இந்த நிகழ்ச்சிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *