வீணையின் நாதம்!

வீணையின் நாதம் கேட்பதற்கு இனிமை
வாசிப்பவரின் விரல் செய்திடும் விந்தை!

மீட்டாத போது இசை வருவதில்லை வீணையை
மீட்டும் போது தான் இசையைப் பிரசவிக்கும்!

தோற்றத்தில் அழகும் கம்பீரமும் உண்டு
தந்திக் கம்பிகளில் அடங்கி உள்ளன இசைகள் !

இசைக் கச்சேரிகளின் மகுடம் வீணை
இனிய இசையால் ஈர்த்திடும் உள்ளங்களை !

பயிற்சி இருந்தால் பரவசமாக இசைக்கலாம்
பார்த்தும் கேட்டும் ரசித்து மகிழலாம்!

கண்களை மூடி இசையினைக் கேட்டால்
கனவு உலகத்திற்கும் சென்று மகிழலாம்!

எந்தமொழிப் பாடலையும் இசைக்கலாம்
எந்நாட்டவரும் ரசித்து மகிழலாம்!

மனைவி செல்லம்மாளை வீணையடி நீ எனக்கு என்று

மகாகவி பாரதியார் கவிதையில் எழுதி மகிழ்ந்தார் !

வீணையை விரும்பாதவர் உலகில் இல்லை
வீணை வாசிப்பும் கவலையை நீக்கும்!

வீணையின் நாதத்தை ரசித்துக் கேட்டால்
வீணான கவலைகள் காணாமல் போகும்!

இரண்டு எழுத்து அதிசயம் வீணை
இசையினை அருவியாகக் கொட்டிடும் குற்றாலம் !

கூட்டிசையாகவும் கேட்டு மகிழலாம்
தனி இசையாகவும் ரசித்து மகிழலாம்!

தமிழர்களின் ஆதி இசைக்கருவி வீணை
தமிழர்களின் ‘யாழ்’ கருவிலிருந்து பிறந்திட்டது வீணை!

எந்த வயதினரையும் ஈர்த்திடும் வீணையின் நாதம்
எல்லோரும் ரசித்து மகிழ்ந்திடும் வீணையின் நாதம் !

ஈடுபாட்டோடு இசைத்தால் இனிக்கும் இசை
ஈடுபாட்டோடு ரசித்தால் இனிக்கும் இசை !
வீணையின் நாதம் விரும்பாதோர் உலகில் இல்லை
வீணையின் நாதம் வாலிபம் காக்கும் பொய்யில்லை!

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *