தஞ்சைத் தமிழ் மன்றம் , மதுரை பொற்கைப்பாண்டியன் கவிதாமண்டலம், தமிழ்மதுரை அறக்கட்டளை, வலங்கை வள்ளலார் தொண்டு நிலையம் மற்றும் குடந்தை குந்தவை நாச்சியார் அரிமா சங்கம் இணைந்து நடத்திய வள்ளலார்200 கவியரங்கம் வலங்கைமான் தென்றல் அரங்கில் நடைபெற்றது.

நான்கு அமர்வுகளாகக் கவியரங்கம் நடைபெற்றது. பொற்கைப்பாண்டியன், தங்கவல்லி அன்புவல்லி , இராம.வேல்முருகன் , சித்தார்த் பாண்டியன் ஆகியோர் கவியரங்கத் தலைமையேற்க சுமார் 100 கவிஞர்கள் சென்னை, மதுரை, நெல்லை , சேலம், கோவை, திண்டிவனம், சிதம்பரம், நாகை, திருவாரூர் திருச்சி, தஞ்சாவூர் தேனி போன்ற இடங்களிலிருந்து வருகை தந்து கவிதை வாசித்தனர். மதுரை ஈசுவரராசா வரவேற்க மதுரை முத்துவிஜயன் நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கினார். கவிக்கோ விக்டர்தாஸ் சிறப்புரையாற்றி கவிஞர்களுக்குப் பரிசு, நூல், பொன்னாடை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
சிறந்த கவிதைகள் தெரிவு செய்யப்பட்டு 6000 ரூபாய் ரொக்கப்பரிசாக வழங்கப்பட்டது. இரத்தினசபாபதி, வள்ளலார்தாசன், குணசேகர் , வலங்கை சார்கருவூல அதிகாரி பாலசுப்ரமணியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முனைவர் சா.சே இராஜா நன்றியுரைத்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *