22 அணிகள் பங்கேற்ற மாநில அளவிலான ஹாக்கி போட்டி காரைக்குடி தியான் ஸ்கூல் ஆஃப் ஹாக்கி முதலிடம் பெற்று வெற்றிக் கோப்பையுடன் ஐம்பதாயிரம் ரூபாய் ரொக்க பரிசை தட்டிச் சென்றது

சிவகங்கையில் கடந்த வெள்ளிக்கிழமை துவங்கிய மாநில அளவிலான ஆண்கள் ஹாக்கி போட்டிகள் மூன்று தினங்கள் நடைபெற்றது.

சிவகங்கை சேர்ந்த மாநில ஹாக்கி வீரர் ராஜேஷ்வரன் நினைவாக சிவகங்கை யங் சேலஞ்சர்ஸ் ஹாக்கி கிளப் இந்த போட்டியினை சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடத்தியது இந்த ஹாக்கி போட்டியில் தமிழக முழுவதும் இருந்து தலைசிறந்த 22 அணிகள் பங்கேற்கின்றன இதில் சென்னை, விழுப்புரம், இராஜபாளையம், கோவில்பட்டி, கிருஷ்ணகிரி, ஊட்டி, பாண்டிச்சேரி, காரைக்குடி, தர்மபுரி, மதுரை, புதுக்கோட்டை, ஆற்காடு, கோவில்பட்டி, போன்ற ஊர்களில் இருந்து அணிகள் பங்கேற்று விளையாடியது. இந்த போட்டிகள் நாக்அவுட் முறையில் நடைபெற்றது வெற்றி பெற்ற அணிகளுக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் ரொக்க பரிசும், ராஜேஸ்வரன் நினைவு சுழற் கோப்பை மற்றும் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான பரிசுகளும் வழங்கப்பட்டது.

முன்னதாக இன்று நடைபெற்ற கால் இறுதிப் போட்டியில் ராஜேஷ்வரன் நினைவு ஹாக்கி கிளப் சிவகங்கை அணியும் SSDM கல்லூரி கோவில்பட்டி அணியும் விளையாடியது இதில் கோவில்பட்டி SSDM கல்லூரி (2-1) என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இரண்டாவது கால் இறுதிப் போட்டியில் யங் சேலஞ்சர்ஸ் ஹாக்கி கிளப் சிவகங்கை அணியும் ப்ளூ பாய்ஸ் ஹாக்கி கிளப் ராஜபாளையம்
அணியும் விளையாடியது இதில் யங் சேலஞ்சர்ஸ் ஹாக்கி கிளப் (5-0) என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

மூன்றாம் கால் இறுதிப் போட்டியில் தியான் ஸ்கூல் ஆஃப் ஹாக்கி காரைக்குடி அணியும் திருநகர் ஹாக்கி கிளப் அணியும் விளையாடியது இதில் (2-1) என்ற கோல் கணக்கில் காரைக்குடி தியான் ஸ்கூல் ஆஃப் ஹாக்கி வென்றது

நான்காவது கால் இறுதிப் போட்டியில் பிரண்ட்ஸ் ஹாக்கி கிளப் புதுக்கோட்டை அணியும் பாண்டவர் மங்கலம் ஹாக்கி கிளப் கோவில்பட்டி அணியும் விளையாடியது இதில் பிரெண்ட்ஸ் ஹாக்கி கிளப் புதுக்கோட்டை (2-0) என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

அடுத்து நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் SSDM கல்லூரி கோவில்பட்டி அணியும் சிவகங்கை ராஜேஷ்வரன் நினைவு ஹாக்கி கிளப் அணியும் விளையாடியது இதில் (1-0) கோல் கணக்கில் கோவில்பட்டி அணி வெற்றி பெற்றது.

இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தியான் ஸ்கூல் ஆஃப் ஹாக்கி காரைக்குடி அணியும் பாண்டவர் மங்கலம் ஹாக்கி கிளப் கோவில்பட்டி அணியும் விளையாடியது இதில்
காரைக்குடி தியான் ஸ்கூல் ஆஃப் ஹாக்கி (9-8) என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது

பின்னர் நடந்த இறுதிப்போட்டியில் SSDM கல்லூரி கோவில்பட்டி அணியும், தியான் ஸ்கூல் ஆஃப் ஹாக்கி கிளப் காரைக்குடி அணியும் விளையாடியது இதில் காரைக்குடி தியான் ஸ்கூல் ஆஃப் ஹாக்கி 04-03 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று முதலிடம் பெற்றது. இரண்டாம் இடம் கோவில்பட்டி அணியும், மூன்றாம் இடம் சிவகங்கை அணியும், நான்காம் இடம் கோவில்பட்டி பாண்டவர் மங்களம் அணியும் பெற்றது.

அதனை தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் சிவகங்கை நகர் மன்ற தலைவர் துரைஆனந்த் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினார். போட்டிக்கான ஏற்பாட்டினை சிவகங்கை யங் சேலஞ்சர்ஸ் ஹாக்கி கிளப் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *