நகைச்சுவை மன்ற கூட்டம்” மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை குளிர் அரங்கத்தில் நகைச்சுவை மன்ற கூட்டம் நடைபெற்றது. சத்யநாராயணன் தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் மனோகரன் அவர்களுக்கு சத்யநாராயணன், குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், வசன கர்த்தாவும், நடிகருமான அப்பா பாலாஜி, ஒருங்கிணைப்பாளர் இஸ்மத் இணைந்து பொன்னாடை போர்த்தி விருது வழங்கி கௌரவித்தார்கள்.

விழாவில் எஸ்.டி.சுப்பிரமணியன், வண்டியூர் மாணிக்கராஜ், பாஸ்கர், மோசஸ், அருப்புக்கோட்டை மாரிமுத்து, நகைச்சுவை மன்ற உறுப்பினர்கள் மற்றும் புதியவர்கள் கலந்து கொண்டனர்.

கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு சுந்தர பாண்டியன் புகழஞ்சலி செலுத்தினார். விழா ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் இஸ்மத் செய்தார். குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. முடிவில் செல்வக்குமார் நன்றி கூறினார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *