திருப்பாச்சேத்தி சுங்கச்சாவடியில் குப்பை துர்நாற்றத்தால் வாகன ஓட்டிகள் பரிதவிப்பு

திருப்பாச்சேத்தி சுங்கச்சாவடி அருகே குப்பை நிரம்பி இருப்பதால் துர்நாற்றம் வீசுவதாகவும் சுகாதாரக்கேடு நிலவுவதாகவும் வாகனஓட்டிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.மதுரையில் இருந்து பரமக்குடி வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு வாகன போக்குவரத்து நடந்து வருகிறது.

நான்கு வழிச்சாலையை பயன்படுத்தும் வாகனங்களுக்கு திருப்பாச்சேத்தியில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

சுங்கச்சாவடி அருகே நீண்ட துாரம் வாகனங்களை இயக்கும் டிரைவர்கள் வாகனங்களை நிறுத்தி ஓய்வெடுக்க சர்வீஸ்ரோடு, ஓய்வறை உள்ளிட்டவை நான்கு வழிச்சாலையின் இருபுறமும் அமைக்கப்பட்டுள்ளது.

சுங்கச்சாவடியை சுற்றிலும் குப்பை நிரம்பியுள்ளன. சர்வீஸ் ரோடு முழுவதும் பழத்தோல், பிளாஸ்டிக் கவர்,எச்சில் தட்டு, கழிவு நீர் நிரம்பி காணப்படுவதால் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் டிரைவர்கள் வாகனங்களை நிறுத்தி ஓய்வெடுக்க முடிவதில்லை.வளாகம் முழுவதும் சுகாதாரக்கேடு நிலவி வருவதால் நோய் தொற்று அபாயமும் உள்ளது.

மழை காலங்களில் சுங்கச்சாவடியில் உள்ள 11 வழித்தடங்களிலும் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகனங்களை இயக்கவே முடிவதில்லை. சிறிய ரக வாகனங்கள், டூவீலர்கள் தண்ணீரில் சிக்கி பழுதாகி வருகின்றன.எனவே நான்கு வழிச்சாலையில் சுகாதாரத்தை பேண தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுக்கவேண்டும்என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *