தென்னையில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் மேலாண்மை விழிப்புணர்வு முகாம்:-
மற்றும் இனக்கவர்ச்சிப்பொறி செயல்முறை விளக்கம்;-
தென்காசி மாவட்டம், தென்காசி வட்டாரத்தில் உள்ள கணக்கப்பிள்ளை வலசை கிராமத்தில் தோட்டக்கலைத் துறை சார்பாக தென்னை சாகுபடியில் பூச்சி மற்றும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த முகாமிற்கு தென்காசி மாவட்டம் தோட்டக்கலை துணை இயக்குநர் சு.ஜெயபாரதி மாலதி தலைமை வகித்தார்.
தென்காசி வட்டாரம் தோட்டக்கலை உதவி இயக்குநர் மா.தங்கம் மற்றும் கிராம பஞ்சாயத்து தலைவி ஈஸ்வரி முன்னிலையில் நடைப்பெற்றது.
சிறப்பு அழைப்பாளாராக KVK அறிவியல் மையத்தின் விஞ்ஞானி இளவரசன் கலந்து கொண்டு தென்னை சாகுபடியில் நோய் மற்றும் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து பல்வேறு ஆலோசனகைளை வழங்கினார்.
தென்காசி மாவட்டத்தில் விவசாயிகள் அதிக அளவில் தென்னை சாகுபடியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்த பருவ கால நிலையை பொருத்த வரை தென்னையில் வேர் வாடல் நோய், சிவப்பு கூன்வண்டுகள் மற்றும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களின் தாக்குதல் அதிகமாக உள்ளது.
இதனை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் பற்றி இப்பயிற்சியில் விவசாயிகளுக்கு எடுத்துரைக்ப்பட்டது.
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (ஏடிஎம்ஏ) திட்டத்தின் கீழ் சிவப்பு கூன் வண்டுகள், காண்டாமிருக வண்டுகளை கட்டுப்படுத்தும் இனக்கவர்ச்சிப் பொறி பற்றி செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டு முன்னோடி விவசாயிகளுக்கு நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டனர். இதில் சுற்று வட்டார விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
கணக்கப்பிள்ளை வலசை கிராமத்தைச் சேர்ந்த புன்னைவனம் என்ற விவசாயிக்கு வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தில் 5 இனக்கவர்ச்சி பொறிகள் மானிய விலையில் வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை தோட்டக்கலை அலுவலர் பி.வைஷ்ணவி, தோட்டக்கலை உதவி அலுவலர்கள் மணிகண்டன், ஷேக்முகம்மது, ஆகியோர்
செய்திருந்தனர்.