பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் முழுமையான பயிர் காப்பீட்டிற்கான இழப்பீடு கிடைக்கவும், அரசின் நிவாரணம் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

உழவர் பேரியக்க மாநில தலைவர் கோ ஆலயமணி பேட்டி.

கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் வட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து விட்டு விட்டு பெய்த மழை காரணமாக, அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 2,500 ஏக்கர் நெற்பயிர்கள் வயலில் தலைசாய்ந்து கிடப்பது விவசாயிகளை அதிர்ச்சியடைய வைத்தள்ளது இதனால் விவசாயிகளுக்கு சுமார் 6 கோடி வரை இழப்பை சந்திக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே தமிழக அரசு, வேளாண்துறை, வருவாய்த்துறை, சம்மந்தப்பட்ட காப்பீட்டு நிறுவன அலுவலர்களை கொண்டு முழுமையாக நேரடியாக கள ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் முழுமையான பயிர் காப்பீட்டிற்கான இழப்பீடு கிடைக்கவும், அரசின் நிவாரணம் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை.

கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் வட்டத்திற்குட்பட்ட பந்தநல்லூர், திருப்பனந்தாள், வேட்டமங்கலம், குணசேகரநல்லூர், திருமங்கைச்சேரி, வன்னியக்குடி, காவனூர், நெய்குப்பை, நெய்வாசல், சோழியவளாகம், மரத்துறை, ஆகிய கிராமங்களில் செய்யப்பட்டிருந்த சம்பா சாகுபடி நெற்பயிர்களில் இன்னும் ஒரு சில நாட்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், கடந்த 4 நாட்களாக விட்டு விட்டு பெய்த தொடர் மழை காரணமாக, சுமார் 2,500 ஏக்கரில் உள்ள நெற்பயிர்கள் அனைத்தும் மழைநீரால் சூழப்பட்டும், தலை சாய்ந்து வயலிலேயே கிடப்பதால் விவசாயிகளை அதிர்ச்சியிலும், வேதனையில் ஆழ்த்தியுள்ளது 

இந்நிலையில், பாதிக்கப்பட்ட வயல்களை இன்று, உழவர் பேரியக்க மாநில தலைவர் கோ ஆலயமணி தலைமையில், மாவட்ட செயலாளர் மண்டபம் கலியமூர்த்தி, பாமக மாவட்ட துணை செயலாளர் சங்கர், பாமக மாவட்ட முன்னாள் தலைவர் திருஞானம் பிள்ளை, திமுக ஒன்றிய உறுப்பினர் சம்பத், மற்றும் முருகேசன், பாரி, சிவா வன்னியர் சங்க மாவட்ட துணை தலைவர் வெங்கட்ராமன் பாமக ஒன்றிய செயலாளர் ராகுல், தலைவர் பிரபு,பாமக பொறுப்பாளர் முத்து அடங்கிய குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர் அப்போது செய்தியாளர்களை சந்தித்த உழவர் பேரியக்க மாநில தலைவர் கோ ஆலயமணி, 

தஞ்சை மாவட்ட எல்லை பகுதியில் அமைந்துள்ள திருவிடைமருதூர் வட்டத்திற்குட்பட்ட பந்தநல்லூர், திருப்பனந்தாள் வேட்டமங்கலம், குணசேகரநல்லூர், திருமங்கைச்சேரி, வன்னியக்குடி, காவனூர், நெய்குப்பை, நெய்வாசல், சோழியவளாகம், மரத்துறை, ஆகிய கிராமங்களில் செய்யப்பட்டிருந்த சம்பா சாகுபடி நெற்பயிர்களில் இன்னும் ஒரு சில நாட்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், கடந்த 4 நாட்களாக விட்டு விட்டு பெய்த தொடர் மழை காரணமாக, சுமார் 2,500 ஏக்கரில் உள்ள நெற்பயிர்கள் அனைத்தும் மழைநீரால் சூழப்பட்டும், தலை சாய்ந்து வயலிலேயே கிடப்பதால், ஏக்கர் ஒன்றுக்கு 20000 முதல் 25000 வரை செலவு செய்ய உள்ள விவசாயிகளுக்கு சுமார் 6 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது இதில் இருந்து மீள, தமிழக அரசு, விரைந்து வருவாய்த்துறை, வேளாண்துறை மற்றும் சம்மந்தப்பட்ட காப்பீட்டு அலுவலர்களுடன் நேரடியாக கள ஆய்வு செய்து, பாதிப்பை முழுமையாக கணக்கெடுத்து அவர்களுக்குரிய நிவாரணத்தை அரசும், காப்பீட்டிற்கான இழப்பீட்டினை சம்மந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனமும் விரைந்து வழங்கி விவசாயிகளை காப்பாற்றிட வேண்டும் இப்பகுதி, தஞ்சை மாவட்ட எல்லை பகுதியில் அமைந்துள்ள நிலையில், இதில் இருந்து 4 கி.மீ தொலைவில் உள்ள திருவாரூர் மாவட்டம், மயிலாடுதுறை மாவட்டத்திற்கு இழப்பீடு வழங்கும் போது, இதனை தஞ்சை மாவட்டம் என்ற கண்ணோட்டத்தில், மாற்றந்தாய் மனப்பான்மையுடன் அரசு செயல்படுவதையும் கைவிட வேண்டும் என்றும் அவர் மேலும் கேட்டுக்கொண்டார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *