மருதம்புத்தூர் கிராமத்தில் தென்னை சாகு படியில் பூச்சி மற்றும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு;-
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டாரம் மருதம்புத்தூர் கிராமத்தில் தோட்டக்கலை துறை சார்பில் தென்காசி மாவட்டம் தோட்டக்கலை துணை இயக்குனர் ஜெயபாரதி மாலதி மற்றும் ஆலங்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சங்கரவேல் ஆகியேர் அறிவுரையின்படிதென்னை சாகு படியில் பூச்சி மற்றும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது.
இதில் தோட்டக்கலை அலுவலர் ஜீனத் பேகம் இந்தப் பருவ கால நிலையை பொறுத்தவரை தென்னையில் வேர் வாடல் நோய் சிவப்பு கூண் வண்டுகள் மற்றும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களின் தாக்குதல் அதிகமாக உள்ளது. இதனைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் பற்றி இப் பயிற்சியில்விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்கள் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை ஏ டி எம் ஏ திட்டத்தின் கீழ் சிவப்பு கூன் வண்டுகள் காண்டாமிருக வண்டுகளை கட்டுப்படுத்தும் இனக்கவர்ச்சி பொறி பற்றி செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.. இதில் சுற்று வட்டார விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
இறுதியில் மருதம்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம் என்ற விவசாயிக்கு வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகாமை திட்டத்தில் ஐந்து இன கவர்ச்சி பொறிகள் மானிய விலையில் வழங்கப்பட்டது.
இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை உதவி தோட்டக்கலை அலுவலர் மணிகண்டன் செய்திருந்தார்.